போக்குவரத்து விதிகளை கண்டிப்பான முறையில் பார்க்க, புதிய வாகன பறிமுதல் சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியது துபாய் காவல்துறை.
இந்த புதிய திருத்தங்கள் மூலம் அபராதம் விதித்தல், விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பான சாலை வசதி போன்றவற்றை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையின் தலைமை தளபதி, 2015 இன் அரசாணை எண். 29-ல், கீழ் கண்டவாறு திருத்தங்களை செய்துள்ளார்.
30 நாட்கள் பறிமுதல் செய்யப்படும், குற்றங்கள்:-
- வாகனம் திடீரென திசை மாறி, உயிர்களுக்கும், பொருட்களுக்கும் அல்லது போக்குவரத்து பாதுகாப்பிற்கும் ஆபத்தாக இயக்கினால்.
- முன் செல்லும் வாகனத்திற்கும் தங்களின் வாகனத்திற்கும் இடையே போதுமான பாதுகாப்பு தூரத்தை விட்டு வாகனம் இயக்காதவர்கள்.
- மொபைல் அல்லது பிற சாதனங்களை பயன்படுத்திக் கொண்டே வாகனம் இயக்கினால்.
- கனரக வாகனங்கள் கட்டாய பாதை ஒழுங்கை (lane) பின்பற்றவில்லை எனில்.
இதுபோன்ற குற்றங்களை புரிந்தவர்களின் வாகனம், 30 நாட்கள் பறிமுதல் செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
14 நாட்கள் பறிமுதல் செய்யப்படும், குற்றங்கள்:-
- தெளிவாக இல்லாத பாதையில், வாகனத்தை இயக்கினால்.
- உயிர்களுக்கும், பொருட்களுக்கும் அல்லது போக்குவரத்து பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தை ரிவர்சில் இயக்கினால்.
- கட்டாயமாக பின்பற்ற வேண்டிய போக்குவரத்து ஒழுங்கை பின்பற்றாமல் போனால்.
- சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தினால்.
- ஆபத்தான முறையில் ஓவர்டேக்கிங் செய்தால்.
- வாகனத்தில் தேவையான அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லையென்றால்.
- அவசரமில்லாத சூழ்நிலையில் சாலையின் புறப்பகுதியில் வாகனம் நிறுத்தினால்.
- வாகனத்திற்கான பதிவு செய்யப்படாத நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது ஒன்றிலேயே வைத்திருப்பதால்.
- போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை ஓட்டினால்.
- உரிய அனுமதி இன்றி வாகனத்தின் நிறத்தை மாற்றினால்.
இவ்வாறு கண்டறியும் குற்றங்களுக்கு வாகனம், 14 நாட்கள் பறிமுதல் செய்யப்படும் என செய்தி குறிப்பு தெரிவிக்கின்றன.
