மழையால் வாகனங்கள் சேதமா? காப்பீடு பெற போலீஸ் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமின்றி, துபாய் போலீஸ் இணையதளம் அல்லது செயலி மூலம் To Whom It May Concern சான்றிதழை இணையத்தளத்திலேயே பெற்றுக்கொள்ளும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில்  பெய்த கனமழையால் வாகனங்களின் உட்புறம் சேதமடைந்தாலோ அல்லது இன்ஜின் பழுதடைந்தாலோ, இனி கவலையடைய தேவையில்லை.

இதற்கான போலீஸ் சான்றிதழைப் பெற இனி நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. துபாய் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்தி எளிதாக பெறலாம்.

ஏன் இந்தச் சான்றிதழ் அவசியம்?

மழை அல்லது வெள்ளத்தினால் வாகனங்கள் பாதிப்படைந்தால், காப்பீடு மூலம் இழப்பீடு பெற இந்த சான்றிதழ் மிக முக்கியமானது.  இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மழையினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய மாற்றங்கள்:

பழைய முறை: முன்பு, வாகனங்களை காவல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று, அதிகாரி ஒருவரால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய முறை: இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, To Whom It May Concern சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தச் சேவை மிகவும் எளிமையானது. கீழ்க்கண்ட படிநிலைகளைப் பின்பற்றவும்:

  • அதில் ‘To Whom It May Concern’ என்ற சான்றிதழ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.
  • மழையினால் வாகனங்கள் சேதமடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • இதற்கான கட்டணமான AED 95-ஐ ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பித்த 1 முதல் 2 வேலை நாட்களுக்குள் உங்கள் மின்னஞ்சலுக்கு சான்றிதழ் வந்துவிடும்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

  • கனமழை மற்றும் மோசமான வானிலை நிலவும் போது, வாகனங்களை அவசியமில்லாமல் வெளியே பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • வெள்ளம் தேங்கியுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
  • வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் குறைத்து, கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் துபாய் காவல்துறையின் உதவி எண்ணான 901-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

TAGGED: