துபாய் மெட்ரோவின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ரோபோக்களைப் பயன்படுத்தும் ஒரு புதிய, புரட்சிகரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது “தானியங்கி ரயில் உள்கட்டமைப்பு ஆய்வு அமைப்பு” (Automated Rail Infrastructure Inspection System – ARIIS) என்று அழைக்கப்படுகிறது.
ARIIS என்றால் என்ன?
Automated Rail Infrastructure Inspection System (ARIIS) எனப்படும் இந்த புதிய AI அடிப்படையிலான ரோபோ ஆய்வு முறை, சென்சார், லேசர் மற்றும் 3D கேமரா போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெட்ரோ தடங்களை மிக விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கிறது. இவற்றின் முக்கிய அம்சங்கள்:
- ஆய்வுகள் 75% வேகமாக நடைபெறுகிறது.
- முன்னதாக மனிதர்களால் இந்த வேலைக்கு 2,400 மணி நேரம் தேவைப்பட்ட நிலையில், இப்போது 700 மணி நேரத்தில் முடிகிறது.
- RTA பணியாளர்கள் ரயில் தடங்களை நேரில் சென்று பார்வையிட தேவையில்லை.
- ஆய்வுகள் மெட்ரோ சேவையை பாதிக்காமல் நடைபெறுகிறது.
- இந்த அமைப்பு லேசர் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் தடங்களின் நிலையை மதிப்பீடு செய்கிறது.
- சேகரிக்கப்படும் தரவுகள் ஏஐ மூலமாக பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
இந்த புதிய முறை மெட்ரோ பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேரத்தையும்ந, மனித உழைப்பையும் பெரிதும் மிச்சப்படுத்துகிறது.
இந்த புதிய அமைப்பு மூலம் மனிதர்களால் செய்யப்படும் பரிசோதனைகள் 70% வரை குறைக்கப்படும் மற்றும் மெட்ரோ தண்டவாள நிலையை 40% அதிக திறனுடன் மதிப்பீடு செய்ய முடியும்.
RTA தெரிவிப்பதாவது, இந்த அமைப்பு மூலம் பின்வரும் சவால்கள் குறைக்கப்படும்:
- பழைய பரிசோதனை முறைகள்.
- பாதைகள் மற்றும் உபகரணங்களின் நிலைமையை தெரிந்து கொள்ளும் சிரமம்.
- எதிர்கால செயல்திறனை கணிக்க முடியாத நிலை.
- மனித தவறுகள்.
- பராமரிப்பு செய்யக்கூடிய நேர வரம்பு.
இதனால் பராமரிப்பு வேலைகள் அதிக துல்லியத்துடன், சிக்கலில்லாமல் நடைபெறும்.
RTA ரயில் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அப்துல் மொஹ்சின் கல்பத் கூறியதாவது:
மெட்ரோவில் இந்த புது சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மெட்ரோவை இன்னும் நம்பகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும். இது துபாயின் ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
கியோலிஸ் எம்எச்ஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் ஃப்ராங்க்ஸ் கூறியதாவது:
“ARIIS என்பது ஒரு முக்கியமான சாதனை. இது துபாய் மெட்ரோவின் பராமரிப்பு பணிகளை மேம்படுத்தி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை கணிசமாக மாற்றுகிறது.
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பயணிகள் மீறல்களை கண்டறியும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்துக்குப் பிறகு துபாய் மெட்ரோவில் அறிமுகமாகும் மற்றொரு நவீனமான தொழில்நுட்ப முன்னேற்றமாகும்.
- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த AI அமைப்புகள், RTA-வின் செயற்கை நுண்ணறிவு உத்தி 2030″ உடன் ஒத்துப்போகிறது.
- இந்த உத்தியின் முக்கிய நோக்கம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI-யைப் பயன்படுத்தி பயண நேரத்தை 30% வரை குறைப்பதாகும்.
- புதிய கணினி ஆய்வு அமைப்பு, தவறான பகுதிகளில் உட்காரும் பயணிகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய பெட்டிகள் அல்லது தங்கப் பெட்டிகளில் இருக்கக்கூடாதவர்களை அடையாளம் காண்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
- மே மாதத்தில், மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களை சுத்தம் செய்ய ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கத் தொடங்கியது. இது சுத்தம் செய்யும் பணிகளை எளிதாக்கும்.
சுருக்கமாக, துபாய் மெட்ரோவில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும், AI மற்றும் நவீன தொழில்நுட்பங்களை RTA தீவிரமாக பயன்படுத்தி வருகிறது.
