2025-2026 கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு; உங்கள் டிரிப்பை இப்போதே பிளான் பண்ணுங்க!

அமீரகத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, 2025 – 2026 கல்வியாண்டுக்கான அதிகாரபூர்வப் பள்ளி நாட்காட்டியை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்.

செப்டம்பரில் தொடங்கும் பள்ளிகளுக்கான அட்டவணை:

பெரும்பாலான துபாய் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் கல்வியாண்டைத் தொடங்குகின்றன. இந்த வகைப் பள்ளிகளுக்கான முக்கிய விடுமுறை நாட்கள் பின்வருமாறு:

கல்வியாண்டு தொடங்கும் நாள்:  ஆகஸ்ட் 25, 2025

முதல் பருவம் முடிவு / குளிர்கால விடுமுறை: டிசம்பர் 8, 2025 முதல் ஜனவரி 4 2026 வரை.

மீண்டும் பள்ளிகள் திறப்பு:  ஜனவரி 5, 2026

வசந்த கால விடுமுறை: மார்ச் 16, 2026 முதல் மார்ச் 29, 2026 வரை 

மீண்டும் பள்ளிகள் திறப்பு:  மார்ச் 30, 2026  

கல்வியாண்டு முடிவடையும் நாள்: ஜூலை 3, 2026

ஏப்ரலில் தொடங்கும் பள்ளிகளுக்கான அட்டவணை:

இந்த அட்டவணையை பெரும்பாலும் இந்தியப் பாடத்திட்டத்தைப் கொண்ட பள்ளிகள் பின்பற்றும். 

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 25, 2025

குளிர்கால விடுமுறை தொடக்கம்: டிசம்பர் 15, 2025  

பள்ளி மீண்டும் தொடங்கும் நாள்: ஜனவரி 5, 2026

கல்வி ஆண்டு நிறைவு: மார்ச் 31, 2026

குறைந்தது 182 பள்ளி நாட்கள் இருந்தால் மட்டுமே இந்தத் தேதி பொருந்தும்.

செப்டம்பரில் தொடங்கும் துபாய் தனியார் பள்ளிகளுக்கான அட்டவணை

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள்: ஆகஸ்ட் 25, 2025

குளிர்கால விடுமுறை தொடக்கம்: டிசம்பர் 8, 2025

மீண்டும் பள்ளிகள் திறப்பு: ஜனவரி 5, 2026

வசந்த கால விடுமுறை: மார்ச் 16, 2026

மீண்டும் பள்ளிகள் திறப்பு: மார்ச்  30, 2026

கல்வியாண்டு முடியும் நாள்: ஜூலை 3, 2026

பொது விடுமுறைகள்:

ஈத் பெருநாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் போன்ற பொது விடுமுறைகள், மத்திய அரசால் அறிவிக்கப்படும் தேதிகளின் அடிப்படையில் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

மேலும் ஐக்கிய அரபு  அமீரக  கூட்டாட்சி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவுடன் அவற்றை உறுதிப்படுத்தும்.

TAGGED: