1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துபாய் ஷாப்பிங் திருவிழா, உலகின் மிக நீண்ட காலமாக நடந்து வரும் வணிகத் திருவிழாவாகும். இந்த ஆண்டு, இது 38 நாட்களுக்கு நடைபெறுகிறது. எப்போதும் போல, இந்த வருடமும் ஷாப்பிங், உணவு, குடும்பப் பொழுதுபோக்கு மற்றும் பல கலாச்சார நிகழ்வுகளுடன் மிகப் பிரம்மாண்டமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
எப்போது?
டிசம்பர் 5, 2025 முதல் ஜனவரி 11, 2026 வரை நடைபெறும்.
2025- 2026 துபாய் ஷாப்பிங் திருவிழாவில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
கலை நிகழ்ச்சிகள்: உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறந்த அனுபவத்தைப் பெற இசைப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
ட்ரோன் ஷோ: மாலை நேரங்களில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ட்ரோன் ஷோக்கள் மற்றும் பல அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை அனைத்து வயதினரையும் கவரும்.
ஷாப்பிங்: ஷாப்பிங் பிரியர்களுக்காக 800க்கும் மேற்பட்ட உலக மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும். இங்கு நீங்கள் விரும்பிய பொருட்களை மலிவான விலையில் வாங்கலாம். மேலும், இந்த திருவிழாவில் நடத்தப்படும் ராஃபிள் குலுக்கல்களில் பங்கேற்று, வாழ்க்கையை மாற்றும் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் பெறலாம்.
உணவு மற்றும் பொழுதுபோக்கு:
சந்தைகளில் பல உணவு வகைகளை ருசிக்கலாம். கடந்த ஆண்டுகளில், CanteenX போன்ற சிறப்பு உணவுச் சந்தைகள் அமைக்கப்பட்டன. இந்த சந்தைகளில் சுவையான உணவுகள் மட்டுமின்றி, DJ இசை நிகழ்ச்சிகள், குடும்பத்தினருக்கான விளையாட்டுப் பகுதிகள் மற்றும் பல பயனுள்ள பட்டறைகளும் இடம்பெறும்.
கடந்தாண்டு துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 6, 2024 முதல் ஜனவரி 12, 2025 வரை நடைபெற்றது.
