துபாயில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வசந்த கால விடுமுறையை (Spring break) அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சில முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் தற்போது இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1. அக்வாவென்ச்சர் வேர்ல்ட் (Aquaventure World)
சலுகை: குறைந்த எண்ணிக்கையிலான இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒரு முன்பதிவிற்கு அதிகபட்சம் 4 டிக்கெட்டுகள் கிடைக்கும்.
காலம்: மார்ச் 10 முதல் மார்ச் 22 வரை.
குறிப்பு: இணையதளம் வழியாக முன்னரே முன்பதிவு செய்வது அவசியம். ( website – https://www.aquaventureworld.com/ )
2. துபாய் மிராக்கிள் கார்டன் (Dubai Miracle Garden)
சலுகை: எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) வைத்திருக்கும் அனைத்து அமீரக குடியிருப்பாளர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும்
காலம்: மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை.
3. ஹவுஸ் ஆஃப் ஹைப்பர் (House of Hype)
சலுகை: தினமும் முதலில் வரும் 50 நபர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும்
நிபந்தனை: நீங்கள் அமீரக தேசியக் கொடியின் நிறங்களிலான உடையை அணிந்து வர வேண்டும்.
காலம்: மார்ச் 15 முதல் மார்ச் 22 வரை.
4. ஜங்கிள் பே வாட்டர்பார்க் (Jungle Bay Waterpark)
சலுகை: குடும்பங்களுக்கான இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. (முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை). மேலும், வாட்டர் ஸ்போர்ட்ஸில் 50% தள்ளுபடி உண்டு.
காலம்: மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை.
குறிப்பு: கட்டாயம் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
5. ஒன் அண்ட் ஒன்லி ராயல் மிராஜ் (One&Only Royal Mirage)
சலுகை: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கடற்கரை மற்றும் நீச்சல் குளம் அனுமதி.
பெரியவர்களுக்கு AED 200 நுழைவுக் கட்டணம் (இது உணவகம் அல்லது பிற செலவுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்).
6. தி லாஸ்ட் வேர்ல்ட் அக்வாரியம் (The Lost World Aquarium)
சலுகை: அக்வாவென்ச்சர் வேர்ல்ட் போன்றே, இங்கும் குறைந்த எண்ணிக்கையிலான இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
காலம்: மார்ச் 10 முதல் மார்ச் 22 வரை.
குறிப்பு: டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவு வாயிலில் நேரடியாக டிக்கெட் வழங்கப்படாது.
இந்தச் சலுகைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படுவதால், செல்வதற்கு முன்பாக அந்தந்த இடங்களின் இணையதளத்தைப் பார்த்து முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
7. ஆரா ஸ்கை பூல் (AURA Skypool)
சலுகை: துபாயில் உள்ள AURA Skypool எனப்படும் உலகின் உயரமான 360° Infinity நீச்சல் குளத்திற்கு மொத்தம் 500 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது,
இதனைப் பெறுவது எப்படி: auraskypool.com இணையதளத்தில், நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பூல் அனுபவத்தைத் (Pool Experience) தேர்வு செய்யுங்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ”AURA500” என்ற கூப்பன் குறியீட்டைப் (code) பயன்படுத்துங்கள்.
முக்கியக் குறிப்பு: இந்தச் சலுகை மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே. மார்ச் 31-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். எனவே, நீங்கள் செல்லத் திட்டமிட்டால் உடனே முன்பதிவு செய்வது நல்லது.
8. டால்பினேரியம் (Dolphinarium)
சலுகை: துபாய் Dolphinarium-ல் நடைபெறும் Dolphin & Seal கண்காட்சியை காண, டெலிவரி ஊழியர்களுக்கு இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், டெலிவரி ஊழியர்களுடன் வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தலா AED 59 கட்டணம் செலுத்தி நிகழ்ச்சியை பார்க்கலாம்.
டால்பின் மற்றும் சீல் (Dolphin & Seal) நிகழ்ச்சியைக் காண டெலிவரி ஓட்டுநர்களுக்கு இலவச அனுமதி.
தேதி: மார்ச் 15 முதல் மார்ச் 22, 2026 வரை.
நேரம்: காலை 11:00 மற்றும் மதியம் 2:00 மணி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்.
முக்கிய குறிப்பு: ஒரு நிகழ்ச்சிக்கு முதல் 500 இடங்கள் மட்டுமே இந்தச் சலுகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எப்படிப் பெறுவது: ஆன்லைனில் முன்பதிவு செய்யத் தேவையில்லை.
நேரடியாக துபாய் Dolphinarium சென்று, டிக்கெட் கவுண்டரில் உங்கள் எமிரேட்ஸ் ஐடியை (Emirates ID) காண்பித்து, இலவச நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
