துபாய் சம்மர் சர்பிரைசஸ் (Dubai Summer Surprises – DSS) 2025 நிகழ்ச்சி ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 66 நாட்களை கொண்ட இந்த விழா, ஷாப்பிங், உணவு, இசை நிகழ்ச்சிகள், மற்றும் குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக வரவுள்ளது. களைகட்டும் இந்த நிகழ்ச்சியை துபாய் ஃபெஸ்டிவல் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்று நடத்துகிறது.
துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டு, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
- 3-கட்ட சில்லறை சலுகைகள்
- ஃபிளாஷ் விற்பனை
- உணவு, தங்கும் சலுகைகள்
- நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
- மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள்
3-கட்ட சில்லறை சலுகைகள்:
துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) வரலாற்றிலேயே முதல் முறையாக, சில்லறை வணிக சலுகைகள் (Retail Offers) 3 தனித்தனி கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
- Summer Holiday Offers – ஜூன் 27 முதல் ஜூலை 17 வரை
- Great Dubai Summer Sale – ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 10 வரை
- Back to School – ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 31 வரை
துபாயில் இந்த கோடைகால முழுவதும் புதிய சலுகைகள், மால் முழுவதும் நிகழ்ச்சிகள், பிரபல பிராண்ட்களின் சிறப்பு தள்ளுபடிகள், குறுகிய கால ஃபிளாஷ் சலுகைகள் மற்றும் பரிசுகளுக்கான ராஃபிள் டிராக்கள் என வணிக விற்பனை நிலையங்களுக்கு கோடை சலுகையை வழங்கும் ஒரு முக்கிய ஷாப்பிங் மையமாக மாற்றுகிறது.
ஃபிளாஷ் விற்பனை:
12 மணி நேர தள்ளுபடி மற்றும் டெய்லி சர்ப்ரைஸ்கள் போன்ற ஷாப்பர்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஃபிளாஷ் சலுகைகள், DSS நிகழ்வின் முக்கிய பகுதியாக தொடர்ந்து இடம்பெறும். இவை ஃபேஷன், மின்னனு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்ட்களில் குறுகிய காலத்திற்கான சிறப்பு சலுகைகளை வழங்கும்.
பங்கேற்கும் மால்கள் அனைத்தும் இன்டராக்டிவ் நிகழ்ச்சிகள், நேரடி கலை நிகழ்வுகள், மற்றும் போட்டிகள் போன்றவற்றை நடத்தி, நகரின் உற்சாகமான சூழலுக்கு மேலும் உயிரூட்டும்.
உணவு, தங்கும் சலுகைகள்:
DSS 2025-இல், துபாயின் பல்வகை உணவுக் கலாச்சாரத்தையும் சிறப்பாக முன்வைக்க உள்ளது. ஜூலை 4 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் கோடை உணவக வாரம் (Summer Restaurant Week) நகரம் முழுவதும் உள்ள முன்னணி உணவகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெனுக்களை வழங்குகிறது.
மேலும் குடும்பங்கள் மற்றும் பார்வையாளர்கள் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், மற்றும் ரிசார்ட்டுகளில் வெல்ல முடியாத தங்குமிட தொகுப்புகளைப்( staycation) பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தருகிறது.
நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:
- ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை, தொடக்க வார இறுதியுடன் நட்சத்திரங்கள் நிறைந்த பொழுதுபோக்காக நடைபெறும்.
- ஜூன் 27: பனா (Banah) ஜுமைரா ஜபீல் சராயில் நிகழ்ச்சி.
- ஜூன் 29: அத்னான் சமி (Adnan Sami) கோகோ-கோலா அரங்கில் நேரடி நிகழ்ச்சி.ஜூலை 4 முதல் 13 வரை, Dubai World Trade Centre-இல் நடைபெறும் பிரபலமான Beat The Heat DXB கச்சேரி தொடர் Tul8te மற்றும் Almas ஆகியோருடன் துவங்குகிறது.
- ஜூலை 3: லெபனான் இசைக்குழு அடோனிஸ் (Adonis) துபாய் ஓபராவில்.
- ஜூலை 19: இந்திய பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் (Shreya Ghoshal) DWTC-யில்.
- ஆகஸ்ட் 29, 30: குவைத் நாடக தயாரிப்பு மேட் இன் குவைத் (Made in Kuwaiti) துபாய் ஓபராவில்.
- இந்த நிகழ்ச்சிகள் DSS-ஐ இசை, கலாச்சாரம், மற்றும் மகிழ்ச்சியின் விழாவாக மாற்றுகின்றன.
மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகள்
துபாயின் கோடை விழாவில், குழந்தைகள் விரும்பும் மாஸ்காட்கள் – மோடெஷ் மற்றும் டானா மீண்டும் வருவதால் மேலும் சிறப்பு சேர்க்கப்படுகிறது. இவர்கள் கலந்துரையாடும் பகுதிகள், புகைப்படம் எடுக்கும் சந்திப்புகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவர். கூடுதல் இசை நிகழ்ச்சிகள், சில்லறை விற்பனை நிகழ்வுகள், உணவுத் திருவிழாக்கள், மற்றும் குடும்பத்திற்கான அனுபவங்கள் போன்ற முழு நிகழ்ச்சி விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.
இந்த கொண்டாட்டம் அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டு, துபாயை ஒரு சிறந்த கோடை விடுமுறையை மாற்றும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
