RTA மற்றும் மனித வள ஆணையத்தின் ஆய்வின் அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய பரிந்துரைகள் வெளியீடு

ஊழியர்களுக்கு, தங்களின் பணி நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும், வீட்டில் இருந்தே பணி புரியவும் (remote working) இந்த ஆய்வு மேற்க்கொள்ளப் பட்டது. இதன் மூலம் துபாயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் துபாய் சாலைகள் மற்றும் துபாய் மனித வள ஆணையம்  இணைந்து நடத்திய இரண்டு ஆய்வுகளின் முடிவில் பரிந்துரைகள் வெளியாகியுள்ளன

ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள் என்ன? 

இந்த ஆய்வின் படி அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, தங்களின் பணி நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும் (உதாரணத்திற்கு காலை 08 மணி முதல் மாலை 06 மணி இடைப்பட்ட நேரத்தில், ஊழியர்களுக்கு ஏதுவான எட்டு மணி நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்) அல்லது வீட்டில் இருந்தே பணி புரியவும் (remote working) பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக…

மொத்த ஊழியர்களுள் 20 சதவீத நபர்கள் வீட்டில் இருந்து பணி புரியும் பட்சத்தில் முக்கிய சாலைகளான ஷேக் சையத் சாலையில் 9.8 சதவீதம் வரையும், அல் கைல் சாலையில் 8.4 சதவீதம் வரையும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவு விவரங்கள்:

முதல் ஆய்வில் 644 நிறுவனங்களில் இருந்து 320,000 மேற்ப்பட்ட ஊழியர்களிடம் நடத்தப்பட்டது, இரண்டாவதாக 12,000 தனியார் ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் 32 சதவீத தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், 58 சதவீத நிறுவனங்கள் நடைமுறைப் படுத்த தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூடுதலாக, 31 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விருப்பமான பணி நேரத்தை தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கி வருவதாகவும், மேலும் இதனை 66 சதவீதம் பேர் இதை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றனர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை அதிகாரிகள் ஆலோசனை:

இந்த ஆய்வு குறித்து, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கமிஷனர் ஜெனரல் மேட்டர் அல் டயர் மற்றும் DGHR இன் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா அலி பின் சயீத் அல் ஃபலாசி ஆலோசனை நடத்தினர், இதில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஊழியர்கள் பணி நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்வதும், ரிமோட் வொர்கிங் வசதியை வழங்குவது போன்றவை போக்குவரத்து மேலாண்மை திட்டத்திற்கு உதவும் என்று  மேட்டர் அல் டயர் கூறினார்.

இவை மூலம் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேகப் பாதைகளை அதிகரிப்பதும் குடியிருப்பாளர்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது போன்ற முயற்சிகள் அடங்கும்.

வீட்டில் பணி புரியும் வசதி (ரிமொட் வொர்க்கிங்) துபாயின் அரசாங்க பணியிட கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது, 2020 ஆம் ஆண்டில் துபாய் அரசாங்கத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு துறைகளை ஈர்க்க கூடிய முடிவாய் இது உள்ளது என்று அல் ஃபலாசி கூறியுள்ளார்.

சமீபத்திய புள்ளி விவரங்கள்:

சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில், 80 சதவீத அரசு துறைகள் வாரத்திற்கு இரண்டு நாள் வீட்டில் இருந்து பணி புரியும் வசதியை வழங்கி வருகின்றன.

ஊழியர்களிடமிருந்து இந்த நேர்மறையான கருத்துக்களைக் கண்டது, 87 சதவீதம் பேர் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுடன் ஒத்துப்போகிறது என்றும் 89.4 சதவீதம் பேர் இது தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களில் 80.4 சதவீதம் பேர் வீட்டில் பணிபுரியும் போது தங்கள் உற்பத்தித்திறனை அலுவலக வேலைக்கு இணையாக உணர்கிறார்கள் என்றும், 90 சதவீதம் பேர் சகாக்கள் மற்றும் மேலாளர்களுடன் தொடர்பு அல்லது இணைப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.