துபாயில் அறிமுகமான செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஸ்மார்ட் ரேடார் மூலம் பதிவு செய்யப்படும் போக்குவரத்து விதிமீறல்களையும், அதற்கான அபராத விவரங்களையும் போக்குவரத்து பொதுத் துறை வெளியிட்டுள்ளது.
உள்ளடக்கம்
வேக வரம்பை மீறுதல்:
சாலைகளில் நிர்ணயம் செய்யப்பட்ட வேக வரம்பை விட எவ்வளவு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக செல்கிறோம் என்பதை பொருத்து மாறுபட்ட அபராத விவரங்கள் வெளியாகியுள்ளன.
- 80 கிமீ கூடுதலாக சென்றால்: AED 3,000 அபராதம் மற்றும் 60 நாட்கள் வாகனம் பறிமுதல், ஓட்டுனர் உரிமத்தில் 23 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
- 60 கிமீ கூடுதலாக சென்றால்: AED 2,000 மற்றும் 20 நாட்கள் வாகனம் பறிமுதல், ஓட்டுனர் உரிமத்தில் 12 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
- 50 கிலோ மீட்டருக்கும் மேல்: AED 1,000 அபராதம்
- 40 கிலோ மீட்டருக்கும் மேல்: AED 700 அபராதம்
- 30 கிலோ மீட்டருக்கும் மேல்: AED 600 அபராதம்
- 20 கிலோ மீட்டருக்கும் மேல்: AED 300 அபராதம்
போக்குவரத்து விளக்கு மற்றும் பாதை தொடர்பானவை:
- சிக்னலை பின்பற்றாமல் செல்லுதல்: AED 1,000 அபராதம் மற்றும் 30 நாட்கள் வாகனம் பறிமுதல், 12 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
- முறையான பாதையை (lane) பின்பற்றாமல் இருத்தல்: AED 400 அபராதம், கனரக வாகனங்களுக்கு AED 1500 மற்றும் 12 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
- மாற்று வழியில் செல்வது: AED 600 அபராதம் மற்றும் 7 நாட்கள் வாகனம் பறிமுதல், 4 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
- சாலை இடுக்குகளில் தவறாக பயணித்தல்: AED 1000 அபராதம் மற்றும் 30 நாட்கள் வாகனம் பறிமுதல், 6 பிளேக் புள்ளிகள் விதிக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பானவை:
- சீட் பெல்ட் அணியாமல் இருத்தல்: AED 400 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்பாடு: AED 800 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- வாகன ஜன்னல் கண்ணாடியில் அதிகப்படியான tint படிந்திருத்தல்: AED 1500 அபராதம்
- இயக்கும் போது முறையான இடைவெளி விடாமல் பயணித்தல்: AED 400 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- அதிகப்படியான சத்தம் எழுப்பும் வாகனங்கள்: AED 2000 அபராதம் மற்றும் 12 பிளேக் புள்ளிகள்
பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து ஓட்டம் தொடர்பானவை:
- பாதசாரிகளை கடக்க விடாமல் தடுத்தல்: AED 500 அபராதம் மற்றும் 6 பிளேக் புள்ளிகள்
- திரும்ப கூடாதா இடத்தில் திரும்பினால்: AED 500 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- காலாவதியான ஓட்டுனர் உரிமத்தை வைத்துகொண்டு வாகனம் இயக்குதல்: AED 500 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தினால்: AED 1000 அபராதம் மற்றும் 6 பிளேக் புள்ளிகள்
கனரக வாகனங்களுக்கானவை:
- தடை செய்யப்பட்ட பகுதியில் கனரக வாகனம் இயக்குதல்: AED 1000 அபராதம் மற்றும் 4 பிளேக் புள்ளிகள்
- வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக்கு தடையாக இருப்பது: AED 500 அபராதம் விதிக்கப்படும்.
