ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக புனித குர்ஆன் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 24 மணி நேரமும் செயல்படும் முதல் புனித குர்ஆன் தொலைக்காட்சி சேனல், ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை அன்று துவங்கப்பட்டது. இது “இறைவனுடன் இருங்கள், இறைவன் உங்களுடன் இருப்பார்” என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

ஷார்ஜா மன்னர் மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி உத்தரவின் படி, இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா ஒலிபரப்பு ஆணையத்தின் (SBA) கட்டுப்பாட்டின் கீழ், இந்த புதிய தொலைக்காட்சி சேனல் நிறுவப்பட்டுள்ளது. இது மக்கள் குர்ஆன் ஓதுதல், குர்ஆன் ஆராய்ச்சி குறிப்புகள், மற்றும் குர்ஆன் பற்றிய விளக்கவுரை ஆகியவற்றை விரிவாக வழங்குகிறது.

மேலும், புனித ரமலான் மாதத்தின் போது, ஜும்மா தொழுகை, தாராவீஹ் தொழுகை, மற்றும் கியாம் தொழுகைகளை நேரடியாக ஒளிபரப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் மத கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ளக் குறுகிய கல்வித் தொடர்களும், இந்த தொலைக்காட்சியில் இடம் பெறுகின்றன.  

அமீரகம் மற்றும் இஸ்லாமிய உலகின் மதமார்க்க ஊடகமாய் இந்த தொலைகாட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மன்னர் தெரிவித்துள்ளார்