துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, வானளாவிய புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) கோபுரத்தில் இருந்து வெடிக்கப்படும் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியைப் பார்ப்பதுதான் இந்த உலகப் புகழ்பெற்ற காட்சியைப் பார்ப்பதற்கு, டிக்கெட் எடுத்து புர்ஜ் பார்க் போன்ற இடங்களில் கூட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆம், புர்ஜ் பார்க் நுழைவுச்சீட்டு ஒரு நபருக்கு AED 997.50 என்ற கட்டணத்தில் விற்கப்பட்டாலும், டவுன்டவுன் துபாய் முழுவதும் இந்த பிரமாண்டமான காட்சியை இலவசமாகப் பார்க்கக்கூடிய பல பொது இடங்கள் உள்ளன.
இலவசமான இடங்கள்:
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை இலவசமாக எப்படி, எங்கு, எப்போது பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு (Sheikh Mohammed Bin Rashid Boulevard) மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.
இங்கு வாணவேடிக்கை, லேசர் ஷோக்களை டிக்கெட் இல்லாமல் பார்க்கலாம்.
முன்னால் செல்ல முடியாதவர்களுக்காக, ஷோவை நேரலையில் பார்க்க எல்.ஈ.டி (LED) திரைகள் வைக்கப்படும்.
நுழைவு வாயில்கள்
கூட்டத்தைக் கட்டுப்படுத்த நுழைவு வாயில்கள் இருக்கும். ஒரு பகுதியில் கூட்டம் நிறைந்தவுடன், அந்த வாயில் மூடப்படும்.
நுழைவு வாயில் 1: Boulevard Heights
நுழைவு வாயில் 2: Burj Vista
நுழைவு வாயில் 3: Emaar Square
நுழைவு வாயில் 4: Former Address Boulevard
நுழைவு வாயில் 5: Fountain Views
நுழைவு வாயில் 6: Address Downtown
நுழைவு வாயில் 7: Vida Dubai Mall
நேரம்:
மாலை 4 மணிக்கு முன் டவுன்டவுன் துபாயை அடைவது வேண்டும். கூட்டம் கூடுவதை பொறுத்து சாலை மூடல்கள் பொதுவாக மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தொடங்குகின்றன. சாலை மூடப்பட்ட பிறகு, நீங்கள் வாகனங்களை ஓட்டி டவுன்டவுனுக்குள் செல்ல முடியாது.
இலவச பொதுப் பகுதிகளில் உணவு மற்றும் மது அல்லாத பானங்களை கொண்டு வரலாம். புர்ஜ் பார்க் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு டிக்கெட் விலை AED 997.50, 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு AED 577.5 வசூலிக்கப்படுகிறது.
நீரில் இருந்து ரசிக்கலாம்:
துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 2025, டிசம்பர் 31 அன்று புத்தாண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை நீர்வழியில் இருந்து காண வசதியாக, துபாய் ஃபெர்ரி (Dubai Ferry), அப்ரா (Abra) மற்றும் வாட்டர் டாக்ஸி (Water Taxi) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் ஃபெர்ரி (Dubai Ferry)
துபாய் ஃபெர்ரி பயணமானது வானவேடிக்கையை மிக அருகில் ரசிக்க ஒரு பிரீமியம் தேர்வாக இருக்கும்.
சில்வர் வகுப்புக்கு கட்டணம் AED 350
கோல்டன் வகுப்பு கட்டணம் AED 525
2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு 50% தள்ளுபடி உண்டு. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
பாரம்பரிய அப்ரா (Abra)
குறைந்த விலையில் புத்தாண்டு அனுபவத்தைப் பெற விரும்புவோருக்கு அப்ரா சிறந்த தேர்வாகும். ஒரு நபருக்கான டிக்கெட் விலை AED 150.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
வாட்டர் டாக்ஸி (Water Taxi)
குடும்பமாக அல்லது ஒரு பெரிய குழுவாகச் சென்று தனிப்பட்ட முறையில் அனுபவிக்க வாட்டர் டாக்ஸியை அணுகலாம். 20 பயணிகள் அமரக்கூடிய முழுப் படகை AED 3,750-க்கு முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு
தொலைபேசி எண்: 8009090
மின்னஞ்சல்: marinebooking@rta.ae
