துபாயில் ஜேவாக்கிங்: விதிமுறைகள், அபராதங்கள் மற்றும் சரிபார்ப்பு முறைகள்

ஜேவாக்கிங் என்பது அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, வேறு இடங்களில் சாலையைக் கடப்பதை குறிக்கும். துபாயில் இது ஒரு பாதுகாப்பு விதிமீறலாகும் இதற்கென கடுமையான சட்டங்களும் உள்ளன. இது போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிடத்தக்க அபராதங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும். 

விதிமுறைகள்:

  • பாதசாரிகள் சாலையை கடக்கும் குறியீடு உள்ள இடங்களில் மட்டுமே, சாலையைக் கடக்க வேண்டும். மற்ற இடங்களில் கடக்கக் கூடாது. 
  • பச்சை விளக்கு ஒளிரும் போது மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். 
  • பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பாதசாரி சமிக்ஞைகள் (Smart Pedestrian Signals) அமைப்பையும் கவனித்து, சாலையைக் கடக்க வேண்டும். 
  • ஜேவாக்கிங் காரணமாக விபத்து ஏற்பட்டதெனில், அதற்கு பாதசாரியே பொறுப்பாக கருதப்படலாம்.

தண்டனைகள்: 

ஜேவாக்கிங் செய்தால் AED 400 அபராதம் விதிக்கப்படும். ஜேவாக்கிங் செய்தால் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். அதாவது இந்த சட்டம் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். 

ஜெய்வாக்கிங் அபராதங்கள் சரிபார்க்கும் முறைகள்: 

துபாயில் ஜெய்வாக்கிங் செய்ததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா, என்பதைச் சரிபார்க்க பல்வேறு வழிகள் உள்ளன. இணையதளம், செயலி மூலம் சரிபார்க்கலாம்.

Dubai Police இணையதளம்:

  • துபாய் காவல்துறையின் www.dubaipolice.gov.ae இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Traffic Services என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Traffic Fines Inquiry– யைக் கிளிக் செய்யவும்.
  • அமீரக ஐடி எண் அல்லது வாகனப் பதிவு எண் (vehicle plate number) அல்லது ஓட்டுநர் உரிம எண் (Driving license number) அல்லது பாஸ்போர்ட் எண் ஆகிய தகவல்களை உள்ளிடவும்.
  • நிலுவையில் உள்ள அபராதங்களைச் சரிபார்க்கவும்.
  • அபராதத்தைச் செலுத்தவும்.

DubaiNow செயலி:

  • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து DubaiNow செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • UAE Pass-யை Sign in or sign up செய்யவும்.
  • Traffic Fines தேர்வு செய்யவும். 
  • Emirates ID-க்கு செல்லவும்.
  • உங்களது தகவல்களை உள்ளிட்டு, Submit செய்யவும்.
  • ஜேவாக்கிங் அபராதம் எவ்வளவு விதிக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்கவும்.

 Dubai Police செயலி:

  • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து Dubai Police செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  •  Traffic Services என்பதை கிளிக் செய்யவும்.
  •  Traffic Fines Inquiry & Payment என்பதை கிளிக் செய்யவும்,
  • அமீரக ஐடி எண் அல்லது வாகன எண் (vehicle plate number) அல்லது ஓட்டுநர் உரிம எண் (Driving license number) ஆகிய தகவல்களை உள்ளிடவும்.
  • அபராத தொகை எவ்வளவு உள்ளது என்பதை  சரி பார்க்கவும். 
  • ஆன்லைன் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தவும்,

GDRFA இணையதளம்: 

  • https://gdrfad.gov.ae/en என்ற இணையதளத்தில் Fines Inquiry என்பதை கிளிக் செய்யவும்.
  • Emirates ID-யைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அமீரக ஐடி எண், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட தகவல்களை சேர்த்து Submit கொடுக்கவும்.
  • அபராதத் தொகை  திரையில் தெரியும்.
  • டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்யவும்.

ஜேவாக்கிங் செய்தால் சுற்றுலாப் பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுமா?

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இருவரும் துபாயில் ஜேவாக்கிங் அபராதம் விதிக்க உரிமை உண்டு. சட்டங்கள் சமமாகப் பொருந்தும்.

ஜேவாக்கிங் அபராதம் செலுத்தாமல் சொந்த நாட்டுக்கு (அ) பிற நாடுகளுக்கு செல்ல முடியுமா? 

உங்களுக்கு ஜேவாக்கிங் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பின், அதை செலுத்தாமல் சொந்த நாட்டுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ செல்ல முடியாது.

நிலுவையில் உள்ள தொகை அனைத்தையும் செலுத்தியப் பின் தான் செல்ல முடியும். இதற்கென விமான நிலையத்தில் தனி பிரிவும் செயல்பட்டு வருகிறது.

2023இல் விதிக்கப்பட்ட அபராதங்கள்:

2023ஆம் ஆண்டில், துபாயில் ஜேவாக்கிங் காரணமாக சுமார் 320 விபத்துக்கள் மற்றும் 339 காயங்கள் நடந்துள்ளன. ஜேவாக்கிங் செய்த பாதசாரிகளுக்கு  துபாய் போக்குவரத்து காவல் துறை சுமார் AED 43,817 அபராதம் விதித்துள்ளது.  


TAGGED: