கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கிய லூலூ பொது பங்குகளின் விற்பனை, நவம்பர் 05 நிறைவடைந்தது, இதில் சுமார் 25 சதவீத பங்குகள், அதாவது 2.528 பில்லியன் விற்பனை செய்யப்பட்டன, இது கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற தனியார் பொது பங்கு விற்பனைகளில் இது மிகச் சிறந்ததாக அரங்கேறியுள்ளது.
- விற்பனை செய்யப்பட்ட பங்குகள்: கடந்த பத்து ஆண்டுகளில், சிறந்த பொது பங்கு விற்பனையாக LuLu Retail AED 6.32 பில்லியன் வரை திரட்டி சாதனை படைத்துள்ளது.
- முதலீட்டாளர்களின் ஆர்வம்: முதலீட்டாளர்களின் மொத்தத் தேவை AED 135 பில்லியன் ($37 பில்லியன்) ஆக இருந்தது. இது, கடந்த 10 வருடங்களில் அமீரகத்தில் நடைபெற்ற மற்ற தனியார் நிறுவன பொது பங்கு விற்பனையுடன் ஒப்பிடுகைய்ல் மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தை உருவாக்கியது.
- ஒரு பங்கின் விலை மற்றும் மொத்த மதிப்பு: ஒரு பங்கு AED 2.04-க்கு விற்பனை செய்யப்பட்டது, இதன் மூலம் லூலூ குழுமம் AED 21.07 பில்லியன் ($5.74 பில்லியன்) மதிப்பை அடைந்துள்ளது.
- முதலீட்டாளர் எண்ணிக்கை: அமீரகத்தில் இருந்து 82,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குகளை வாங்க பதிவு செய்தனர் எனவும், இது கடந்த பத்து ஆண்டுகளில் அமீரகத்தில் நடைபெற்ற பொது பங்கு விற்பனைகளில் பெரிய அளவிலான தனிப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கையாகும்.
- எதிர்பார்ப்பை விட அதிகம்: இந்த பொது பங்கு விற்பனை 25 மடங்கு கூடுதல் தேவையுடன் முடிவடைந்தது, அதாவது நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை விட 25 மடங்கு அதிக பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- பங்குச்சந்தையில் சேரும் தேதி: லூலூ பங்குகள் நவம்பர் 14-ஆம் தேதி அபு தாபி பங்குச் சந்தையில் (ADX) சர்வதேச வர்த்தகத்தைத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி கூறியது என்ன?
லூலூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சைபி ரூபாவாலா மக்களின் மாபெரும் ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்து, 2024 மற்றும் அதற்கு அப்பாலும் நல்ல வளர்ச்சி எட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். லூலூ நிறுவனம் வளைகுடா சந்தைகளில் தன்னுடைய பங்கைக் கடந்து செல்லும் திட்டத்தில் இருக்கின்றது என கூறினார்.
