மழைக்கு வாய்ப்பு; அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கை!

இரவில் வெப்பநிலை குறையும் போது சில பகுதிகளில் தூசியுடன் கூடிய காற்று மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. 

மழைக்கு வாய்ப்பு:

இன்று வானம் தெளிவாக அல்லது மேகமூட்டத்துடன் காணப்படும். அமீரகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது தூசி நிறைந்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் உள் பகுதிகளில் வெப்பநிலை 30∘C முதல் 34∘C வரையும், கடற்கரை மற்றும் தீவுகளில் 28∘C முதல் 32∘C வரையும், மலைப் பகுதிகளில் 21∘C முதல் 26∘C வரையும் இருக்கும். இரவில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை காலை, குறிப்பாக உள் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடல் நிலை:  

நாள் முழுவதும் காற்று லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும், சில சமயங்களில் வேகம் எடுக்கலாம். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் கடல் நிலை சாதாரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.2 அன்று மேகமூட்டமான வானம் மற்றும் வெப்பநிலை குறையும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: