துவங்கியது புது வருடம், இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிகள் என்னென்ன?

புதிய வருடத்துடன், நாட்டில் பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது, இது அன்றாட வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இவற்றுள், பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு, சாலிக் கட்டண மாற்றங்கள், மதுபான வரி மற்றும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டணம் உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புதிய வாழ்க்கை முறைக்கு உதவுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களையும் ஊக்குவிக்கின்றன.

புதிய பிளாஸ்டிக்களுக்கு தடை:

துபாயில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் கப் மற்றும் டேபிள் கவர் உள்ளிட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு AED 200 அபராதம் விதிக்கப்படும் என்பதும், தொடர்ந்து மீறினால் அபராதம் இரட்டிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலிக் கட்டண முறையில் மாற்றம்:

துபாய் முழுக்க SALIK கட்டண முறையிலும், பார்க்கிங் கட்டண முறையிலும், சிறப்பு நிகழ்வுகளின் போது பார்க்கிங் கட்டணத்தையும் தொடர்ச்சியாக மாற்ற துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டிருந்தது.

மதுபானங்களுக்கு மீண்டும் வரி:

துபாய் ரெஸ்டாரன்ட் மற்றும் பார்களில் கடந்த 2022 இறுதியில் நீக்கப்பட்ட 30% விற்பனை வரி மீண்டும் நடைமுறைப்படுத்தியது துபாய் நகராட்சி.

மதுபானங்களுக்கு மீண்டும் வரி:

துபாய் ரெஸ்டாரன்ட் மற்றும் பார்களில் கடந்த 2022 இறுதியில் நீக்கப்பட்ட 30% விற்பனை வரி மீண்டும் நடைமுறைப்படுத்தியது துபாய் நகராட்சி.

EV வாகனம் சார்ஜ் செய்ய கட்டணம்:  

இலவசமாக இருந்த எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங், ஜனவரி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என UAEV அறிவித்துள்ளது. இதன் மூலம், DC சார்ஜ் வாகனங்களுக்கு கிலோவாட்டிற்கு 1.2 திர்ஹாமும்,  AC சார்ஜ் வாகனங்களுக்கு கிலோவாட்டிற்கு 0.7 திர்ஹாமும், கூடுதலாக மதிப்பு கூட்டு வரியும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரெண்டல் இன்டெக்ஸ்:

துபாய் வாடகை சந்தையை  நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற Smart Rental Index அமலுக்கு வருகிறது. இந்த புதிய இன்டெக்ஸ், குறிப்பாக வாடகை மதிப்பீடுகளில்,  ரியல் எஸ்டேட்  துறையை ஒழுங்குபடுத்தும் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. மேலும், வாடகை விலைகள் குறித்த தெளிவான, தற்போதைய தகவல்களை  வழங்குவதன் மூலம் நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு  இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமத்திற்கு புதிய வயது வரம்பு:

மார்ச் 29, 2025 முதல் அமீரகத்தில் கார்கள் மற்றும் இலகுரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 17-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.

புதிய மஞ்சள் நிற நம்பர் ப்ளேட்:

அபுதாபியில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய மஞ்சள் நிற நம்பர் ப்ளேட்டை AD Mobility  அறிவித்துள்ளது.

அடிப்படை மருத்துவக் காப்பீடு:

ஊழியர்கள் குடியிருப்பு உரிமம் (Residency permit) பெறவும், புதுப்பிக்கவும் முன் நிபந்தனையாக புதிய அடிப்படை மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அபுதாபி மற்றும் துபாயில் கட்டாய மருத்துவக் காப்பீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டம் மற்ற அனைத்து எமிரேட்டுகளிலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

ஷார்ஜா அல் தைத் நகரில் பார்க்கிங் கட்டணம்:

ஷார்ஜாவில் அல் தைத் எனும் நகரில், பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என ஷார்ஜா நகராட்சி அறிவித்தது. அதன் படி,  சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கிங் கட்டணம் அமலில் இருக்கும், வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

துபாய் அபுதாபியில் ஆகாய டாக்ஸி:

துபாய் மற்றும் அபுதாபியில் இந்த ஆண்டு முடிவிற்குள் ஆகாய டாக்ஸிகள் அறிமுகமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வெர்டி போர்ட் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், முக்கிய பகுதிகளுக்கு இவ்வாண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல் மக்தூம் பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடிவுற்றன

துபாய் அல் மக்தூம் தூக்கு பாலத்தின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, ஜனவரி மாத இடையில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபி ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம்

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் பயோமெட்ரிக் தகவல்களை (உங்கள் முகம் அல்லது கைரேகை போன்றவை) பயன்படுத்தி விரைவாகவும் சுமூகமாகவும் பயணிக்க வைக்கும் திட்டம் அறிமுகமாகிறது. இதன் மூலம் ஆவணங்களின் தேவை நீங்குகிறது தற்போது, ஒரு சில விமான நிறுவனங்களைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே பயன்படுத்தும் இதனை 2025 ஆம் ஆண்டில், அபுதாபி விமான நிலையம் வழியாக பறக்கும் அனைவரும் பயன்படுத்தலாம்.

விரிவாக்கம் செய்யப்படும் டிஜிட்டல் நோல் கார்டுகள்:

தொடர்ச்சியாக துபாய் மெட்ரோவை பயன்படுத்துவோருக்கு ஏதுவாக  அனைத்து வகையான செல் போன்களுக்கும் டிஜிட்டல் நோல் கார்டு சேவை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபி ஊட்டச்சத்து தரக் குறியீடு:

உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து தரம் தொடர்பாக A முதல் E வரை தரக் குறியீட்டு லேபில் ஒட்டும் நடைமுறை இவ்வாண்டு முதல் துவங்குகிறது.

பேருந்து நிலையங்களில் இலவச Wi-Fi:

துபாயில் தற்போது 10 பேருந்து நிலையங்களில் இலவச Wi-Fi வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டில் இது அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உயர்த்தப்படும் கழிவுநீர் கால்வாய் கட்டணம்:

துபாயில் இவ்வாண்டு முதல் கழிவுநீர் கால்வாய் கட்டணம், ஒரு கேளான் தண்ணீருக்கு 1.5 fils உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் வருடங்களில் இது மென்மேலும் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.