துபாயில் Parkin பகுதிகளில் நிறுத்திய காரை அங்கேயே எரிபொருள் நிரப்பவும், காரைக் கழுவவும் பயனர்களுக்கு புதிய வசதியை CAFU நிறுவனத்துடன் இணைந்து Parkin அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்புதல் & காரை சுத்தம் செய்தல்
அமீரகத்தின் முன்னணி வாகனம் தொடர்பான சேவைகளை வழங்கும் CAFU நிறுவனத்துடன் இணைந்து துபாயில் கட்டண பார்க்கிங் வசதியை வழங்கும் Parkin நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய சேவையை ஆகஸ்ட் 14, 2025 முதல் தொடங்கியது. துபாய் முழுவதும் உள்ள Parkin இடங்களில் பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்த தொடங்கலாம்.
காரை Parkin பகுதிகளில் நிறுத்தியுள்ள போது எரிபொருள் தீர்ந்து போனாலோ அல்லது காரை சுத்தம் செய்ய விரும்பினாலோ SMS அல்லது WhatsApp மூலம் அனுப்பப்படும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எரிபொருள் டெலிவரி அல்லது காரை கழுவுவதற்கான சேவையை கோர முடியும் அல்லது நேரடியாக CAFU செயலியில் மூலம் சேவைகளை தொடர்ந்து அணுக முடியும். வரும் காலங்களில் Parkin செயலியிலும் இந்த இரண்டு புதிய சேவைகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் & நேரம் குறையும்
இந்த சேவை எளிமை மற்றும் வசதியை வழங்குவதற்கு அப்பால், எரிபொருள் நிலையங்கள் மற்றும் கார் கழுவுதல் நிலையங்களுக்கு பயணிப்பதற்கான தேவையை குறைக்கும். மேலும் இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் காற்று மாசு உள்ளிட்டவற்றைக் குறைக்கும்.
இந்த இரு நிறுவனங்களும் அமீரகத்தின் பசுமை நிகழ்ச்சி நிரல் 2030 உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவற்றின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன.
