ஐக்கிய அமீரகத்தின் ஃபத்வா கவுன்சில் 2026-ஆம் ஆண்டுக்கான ரமலான் மாத ஜகாத் அல் பித்ர் (Zakat Al Fitr) மற்றும் பித்யா (Fidyah) தொகைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜகாத் அல் பித்ர் (Zakat Al Fitr)
ரமலான் நோன்பு முடிவில் வழங்கப்படும் தர்மம்:
ஒரு நபருக்கு 2.5 கிலோ அரிசி அல்லது அதற்கு ஈடாக AED 25 பணமாக வழங்கலாம்.
பெருநாள் (Eid) அன்று அதிகாலை முதல் சூரிய அஸ்தமனத்திற்குள் வழங்குவது சிறந்தது. எனினும், தேவைப்பட்டால் முன்கூட்டியே வழங்கவும் அனுமதி உண்டு.
பித்யா (Fidyah)
உடல்நலக்குறைவு அல்லது முதுமை காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்கள் வழங்க வேண்டியது:
3.25 கிலோ கோதுமை அல்லது AED 20 பணமாக வழங்க வேண்டும்.
மற்ற பரிகாரங்கள்
நோன்பை முறித்ததற்கான பரிகாரம்:
நோன்பை வேண்டுமென்றே முறித்தால், அதற்கு பரிகாரமாக AED 1,200 வழங்க வேண்டும்.
சத்தியத்தை மீறியதற்கான பரிகாரம்:
செய்த சத்தியத்தை மீறினால், AED 200 வழங்க வேண்டும்.
ஹஜ் அல்லது உம்ராவின் போது ஏற்படும் தவறுகள்:
ஹஜ் மற்றும் உம்ரா கடமையின் போது தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தால், AED 120 வழங்க வேண்டும்.
ஏழைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய பணமாக வழங்குவது அனுமதிக்கப்படுகிறது.
இத்தொகைகளை ஜகாத் ஃபண்ட் (Zakat Fund), எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் (Emirates Red Crescent) போன்ற அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொகைகள் அனைத்தும் அமீரகப் பொருளாதார மற்றும் சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
