தென்னிந்தியத் திரைப்படத் துறையின் பிரபலமான விருதுகளில் ஒன்றான SIIMA விருதுகள் 2025 நிகழ்ச்சி செப்டம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் துபாய் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 24 அன்று துபாய் பாராமவுண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
மாருதி சுசுகி நெக்ஸா, ஏர்டெல் வைபை மற்றும் ஸ்வஸ்திக்ஸ் வழங்கும் இந்நிகழ்ச்சியில் SIIMA அமைப்பின் தலைவர் பிருந்தா பிரசாத் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு, தென்னிந்திய ஊடகங்கள், இன்புளுயன்சர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதில் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன், கூலி படப்பிடிப்பின் போது, ரஜினி சார் உடனான நல்ல அனுபவங்கள் உள்ளது. அவர் அப்பாவுடனான பல நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதை என் அப்பாவிடன் சென்று கேட்பேன்” என்று கூறினார்.
SIIMA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் துபாயில் நடத்துவது ஏன் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த SIIMA அமைப்பின் தலைவர் பிருந்தா பிரசாத், துபாய் எங்களுக்கு மிக நெருக்கமான இடம். குறைவான பயண தூரம் கொண்ட நகரம். துபாய் மக்கள் இங்கு எங்களை வரவேற்கிறார்கள்” என்று கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தமிழ் பஸ் துபாய், கலீஜ் டைம்ஸ் மீடியா பார்ட்னர் ஆகிய ஊடகங்கள், ஊடக விளம்பரதாரர்களாக இருந்தன.
செப்டம்பர் 5 அன்று தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக பிரபலங்களுக்கும், செப்டம்பர் 6 அன்று தமிழ் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
