இம்மாத தொடக்கத்தில், அமீரகத்தின் முன்னணி நிறுவனமான லூலூ, தனது 30 சதவீத பொது பங்கு விற்பனையால் AED 6.32 பில்லியன் திரட்டி இருந்தது. மேலும் கடந்த நவம்பர் 14 அன்று அபுதாபி பங்குச் சந்தையில் (Abu Dhabi securities exchange; ADX) பங்குகளை பட்டியலிட்டது. இதனை தொடர்ந்து, துபாயின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Talabat தனது பங்குகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
விற்பனை விவரம்:
இந்த பொது பங்கு விற்பனை மூலம் 3.493 பில்லியனுக்கும் (3,493,236,093) அதிகமான பங்குகளை, ஒரு பங்கின் பெயரளவு மதிப்பு Dh0.04 என நிர்ணயித்து விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
நிறுவனம் தனது 15 சதவீத பங்குகளை, சந்தா காலம் முடிவதற்குள் இரண்டு தவணை பொது பங்கு அளவினை திருத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தா காலம்:
இதற்கான சந்தாக்காலம் நவம்பர் 19 அன்று திறக்கப்பட்டு மற்றும் முதல் தவணைக்கு நவம்பர் 27 வரையிலும், இரண்டாவது தவணைக்கு நவம்பர் 28 வரையிலும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை வரம்பு நவம்பர் 19 அல்லது ஆஃபர் காலம் தொடங்கும் முன் அறிவிக்கப்படும்.
பங்குச்சந்தையில் எப்போது?
நிறுவனம் தனது ஐபிஓ-வின் இறுதி விலையை நவம்பர் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 10 ஆம் தேதி துபாய் நிதிச் சந்தையில் (Dubai Financial Market) பங்குகள் பட்டியலிடப்படவுள்ளது.
சலுகை முடிந்ததும், நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனம் AED 931.52 மில்லியன் (931,529,625) ஆக இருக்கும்.
சிறு முதலீட்டாளர்களுக்கு:
முதல் பிரிவில், Talabat 5 சதவிகித பங்குகளை, அதாவது 174.66 மில்லியனுக்கும் (174,661,805) அதிகமான பங்குகளை சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தது 1,000 பங்குகள் பெறுவர் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு:
இரண்டாவது பிரிவில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 3.318 பில்லியன் (3,318,574,288) பங்குகள், அதாவது 95 சதவிகித பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை AED 5 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதிகபட்ச முதலீடு குறித்து எந்த வரம்பும் நிறுவனம் நிர்ணயிக்கவில்லை.
பங்குகளை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய வங்கிகள்:
– எமிரேட்ஸ் என்என்டிபி வங்கி
– எமிரேட்ஸ் இஸ்லாமிக் வங்கி
– அபுதாபி இஸ்லாமிக் வங்கி
– அபுதாபி கமெர்ஷியல் வங்கி
– முதல் அபு தாபி வங்கி
– மஷ்ரேக்
– எம்பேங்க்
– WIO வங்கி
ஈவுத்தொகைக்கான திட்டம்:
2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்காக, 2025 ஏப்ரலில் குறைந்தது AED 367.25 மில்லியன் ($100 மில்லியன்) ஈவுத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2025 டிசம்பர் 31 இல் முடிவடையும் நிதியாண்டுக்காக AED 1.469 பில்லியன் ($400 மில்லியன்) இரு தவணைகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈவுத்தொகை ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படும்: முதல் பாதி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அக்டோபரில் இடைநிலை தொகை வழங்கப்படும்; மற்றும் முழு வருட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரலில் இறுதித் தொகை வழங்கப்படும். நிறுவனம் தனது நிகர வருமானத்தின் 90% ஈவுத்தொகையாக வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
