7,166 டன் நிவாரண பொருட்களுடன் காசாவுக்குப் புறப்பட்டது அமீரகத்தின் உதவிக் கப்பலான ‘கலீஃபா’!

அபுதாபியில் உள்ள கலீஃபா துறைமுகத்தில் இருந்து “Operation Chivalrous Knight 3” மிஷனின் ஒரு பகுதியாக, கலீஃபா என்ற எட்டாவது ஐக்கிய அரபு அமீரக உதவி கப்பல் இன்று எகிப்து நோக்கி புறப்பட்டது.  இந்த கப்பல் எகிப்தின் அல் அரிஷ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுள்ளது.

காசா மக்களுக்கு அவசர உதவி!

காசா பகுதியில் உள்ள பாலத்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து செய்து வரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கப்பல் அவசர நிவாரணப் பொருட்களுடன் சென்றுள்ளது.

இதுவரை அனுப்பப்பட்டதிலேயே மிகப்பெரிய கப்பல்

இந்தக் கலீஃபா கப்பல் தான், ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை அனுப்பிய உதவி கப்பல்களிலேயே மிகப் பெரியது. இது 7,166 டன் உணவு, மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்கிறது.

இதில் 4,372 டன் உணவுப் பொருட்களும், 1,433 டன் தங்குமிடப் பொருட்களும், 860 டன் மருத்துவப் பொருட்களும், 501 டன் சுகாதாரப் பொருட்களும் உள்ளன.

மொத்தம் 77,266 டன் உதவிகள்:

இந்த சமீபத்திய சரக்குடன் சேர்த்து, ஐக்கிய அரபு அமீரகம் காசா பகுதிக்கு அனுப்பிய மொத்த பொருட்களின் அளவு 77,266 டன் ஆக உயர்ந்துள்ளது.  இது ஐக்கிய அரபு அமீரகம் தனது தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து,  தேவைப்படுபவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதில் கொண்டுள்ள உறுதியைக் காட்டுகிறது.

TAGGED: