அமீரக முன்னாள் அதிபர் மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் மற்றும் அமீரக முன்னாள் பிரதமர் மாண்புமிகு ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களையும் கௌரவிக்கவுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி நினைவு நாணயங்களை CBUAE வெளியிட்டுள்ளது.
‘சயீத் மற்றும் ரஷீத்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருவரும் தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளி நினைவு நாணயங்களை ஜூலை 1ஆம் தேதி வெளியிட்டது அமீரக மத்திய வங்கி (CBUAE).
தங்க நினைவு நாணயம்
40 கிராம் எடையும், 40 மிமீ விட்டமும் கொண்ட தங்க நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் சயீத் மற்றும் ரஷீத் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் தேசிய சின்னம் மற்றும் அமீரக மத்திய வங்கி என்று அரபு மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெள்ளி நினைவு நாணயம்
50 கிராம் எடையும், 50 மிமீ விட்டமும் கொண்ட வெள்ளி நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் சயீத் மற்றும் ரஷீத் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் தேசிய சின்னம் அமீரக மத்திய வங்கி என்று அரபு மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு “நினைவு நாணயம்” என்ற சொற்றொடர் இடம் பெற்றிருக்கும்.
நினைவு நாணயங்களை எங்கு வாங்கலாம்?
தங்க நினைவு நாணயத்தை அபுதாபியில் உள்ள அமீரக மத்திய வங்கியின் தலைமையகத்தில் மட்டுமே வாங்க முடியும். அதுவே வெள்ளி நினைவு நாணயத்தை அமீரக மத்திய வங்கியின் வலைத்தளத்தில் இருந்து மட்டுமே வாங்க முடியும் என அமீரக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமீரக மத்திய வங்கியின் ஆளுநர் ஆளுநர் காலித் முகமது பலாமா கூறுகையில், “இந்த நினைவு நாணயங்களை வெளியிடுவதில் நாங்கள் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்த முயற்சி நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியின் மதிப்புகளை உறுதிப்படுத்துவதையும், இரு தலைவர்களின் ஊக்கமளிக்கும் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது தேசத்தின் வரலாற்றை எதிர்கால சந்ததியினரின் இதயங்களில் வளர்ப்பதற்கு எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”
