தொழுகை நேரம் மாற்றம் முதல் ஹோட்டல்களில் புதிய வசதி வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

62 நிமிடங்களுக்கு புத்தாண்டு வாணவேடிக்கை!

உலக சாதனை புரியும் நோக்கில் ஷேக் சயீத் பெஸ்டிவலில் 62 நிமிடங்கள் நீடிக்கும் பிரமாண்ட வாணவேடிக்கை மற்றும்  6,500 டிரோன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாயில் அல் வத்பா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறப்பு  8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை கொண்டாட்டங்கள் நடைபெறும். 62 நிமிடங்கள் நீடிக்கும் வாணவேடிக்கை. இதன் ஒரு பகுதியாக 62 நிமிடங்கள் நீடிக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய நிதியமைச்சரின் கவனத்தில் NRI-களின் கோரிக்கை

தங்க நகைகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதாகவும், பழைய சுங்க விதிகளை மாற்றவும் NRI-கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுங்கத் துறையில் சீரமைப்பு கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்க நகைகளை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும்போது, அமலில் இருக்கும் பழைய சுங்க விதிகள் அதிக சிரமத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாகக் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய சுங்கத் துறையில் ஒரு “முழுமையான சீரமைப்பு” கொண்டு வரப்படும் என்றும், விதிகள் எளிமையாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொழுகை நேரம் மாற்றம்

அமீரகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 2 முதல் ஜும்ஆ எனப்படும் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12:45 மணிக்கு ஜும்ஆ தொழுகை நடைபெறும் என்று இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம் அறிவித்துள்ளது.

கோடை காலத்தில் வழிபாட்டாளர்களுக்கு மதிய நேரத்தில் சிரமம் ஏற்படும் என்பதால் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது குளிர்காலம் நிலவுவதால் அதற்கு ஏற்றவாறு ஜும்ஆ தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

விற்பனையான ‘Shahrukhz’ கட்டிடம் 

துபாயின் ஷேக் சயீத் சாலையில், AED 2.1 பில்லியன் மதிப்பில் ‘Shahrukhz‘ என்ற பெயரில் 55 தளங்களுடன் வணிக கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே கட்டிடம் முழுவதும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் 2029ஆம் ஆண்டு நிறைவடையும் என்று தகவல்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவர்களின் பெயரை தழுவி இந்த கட்டிடத்திற்கு ‘Shahrukhz’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் கட்டப்படவுள்ள 488 அலகுகளும் குறைந்தபட்ச விலையான AED 2 மில்லியன் முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் புதிய வசதி அறிமுகம்

துபாய் ஹோட்டல்களில் பயோமெட்ரிக் செக்-இன் வசதியை அறிமுகப்படுத்த துபாய் இளவரசர் ஒப்புதல் வழங்கியுள்ளார். விருந்தினர்கள் ஒருமுறை தங்கள் தரவுகளை பதிவேற்றினால், அடுத்தடுத்த வருகைகளில் பயோமெட்ரிக்

மூலம் எளிதாக செக்-இன் செய்யலாம். பயோமெட்ரிக் செக்-இன் முறை படிப்படியாக துபாயில் உள்ள அனைத்து ஹோட்டல்களில் பயன்பாட்டுக்கு வரும். 

TAGGED: