ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, 54GB டேட்டா இலவசமாக வழங்குவதாக அமீரக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Du நிறுவனம் அறிவிப்பு:
அமீரகத்தின் 54வது தேசிய தினத்தை முன்னிட்டு டிச. 1 அன்று தனது போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளர்களுக்கு 54GB டேட்டாவை 5G வேகத்தில் இலவசமாக வழங்குவதாக Du நிறுவனம் அறிவித்துள்ளது.
போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு டிச. 1 முதல் ஏழு நாட்களுக்கு 54GB டேட்டா செல்லுபடியாகும். ஃப்ளெக்ஸி வருடாந்திர திட்டத்தில் உள்ள ப்ரீபெய்ட் (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு டிச.1 முதல் 12 மாதங்களுக்கு 54GB டேட்டா செல்லுபடியாகும்.
அதுவே ரோமிங் வாடிக்கையாளர்களுக்கு டிச.1 முதல் டிச. 3 வரை இலவச 54GB டேட்டாவை பயன்படுத்தலாம்.
e& நிறுவனம் அறிவிப்பு:
e& நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 54GB இலவச டேட்டாவை அறிவித்துள்ளது. அதன்படி போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு டிசம்பர் 1 முதல் 7 வரை இந்த இலவச டேட்டா கிடைக்கும். அதுவே எமிராட்டி பயனர்களுக்கு போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் இரண்டிலும் 54GB இலவச டேட்டா கிடைக்கும்.
