புதிய திர்ஹாம் சின்னம் எப்படி பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்த கூடாது; வழிகாட்டு நெறிமுறைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) சமீபத்தில் திர்ஹம் (AED) நாணயத்திற்கான புதிய சின்னத்தை  மார்ச் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் பாரம்பரியம், வளர்ச்சி நோக்கம், மற்றும் வருங்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்நிலையில் இந்த புதிய திர்ஹாம் சினத்தை எப்படி பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்த கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

திர்ஹாம் சின்னம் எதை குறிக்கிறது?

திர்ஹாமின் ஆங்கிலப் பெயரைக் குறிக்கும் வகையில், D என்ற எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவில் உள்ள இரண்டு கோடுகள் UAE கொடியை குறிக்கிறது. வளைந்த முனைகள் அரபு எழுத்துக்களை குறிக்கிறது, கூர்மையான முனைகள் கருணை மற்றும் அதிகாரத்தை குறிக்கின்றன.

திர்ஹாம் சின்னத்தை எப்படி பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்த கூடாது?

நாட்டின் பொருளாதார விவரிப்பில் திர்ஹாம் சின்னத்தின் பங்கை வலுப்படுத்தும் வகையில் அதன் டிஜிட்டல் மற்றும் நேரடி பயன்பாட்டில் சில வழிமுறைகளை உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

எங்கே பயன்படுத்தலாம்?

  • கரன்சிகளில் பயன்படுத்தப்படும்.
  • காசோலைகள், விலைப்பட்டியல்கள், ரசீதுகளில் பயன்படுத்தப்படும்.
  • POS அமைப்பு மற்றும் ATM-களில் பயன்படுத்தப்படும்.
  • ஆன்லைன் மற்றும் கடைகளில் விலை பட்டியல்களில் பயன்படுத்தலாம். 
  • நிதி பயன்பாடுகள், கணக்கியல் அமைப்புகள், UI புலங்களில் பயன்படுத்தலாம்.

எங்கே பயன்படுத்த கூடாது?

  • லோகோ அல்லது பிராண்டிங்களில் பயன்படுத்த கூடாது.
  • ஸ்பிளாஸ் திரைகள் அல்லது தலைப்புகளில் 
  • “திர்ஹாம்கள்” என்று வார்த்தைகளாக எழுதும் போதும் பயன்படுத்த கூடாது.

திர்ஹாமை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

காசோலை புத்தகம்:

  • ‘amount in figures’ புலத்தில்: எண் மதிப்புக்கு முன் திர்ஹாம் சின்னம் அதே அளவு/எடையில் இருக்க வேண்டும்.
  • ‘amount in words’ புலத்தில்: “திர்ஹாம்கள்”  என்று சொற்களாக பயன்படுத்த வேண்டும்.

ரசீதுகள்:

  • தொகை மதிப்புக்கு முன் திர்ஹாம் சின்னம் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சின்னம் ஒரே அளவு/எடையில் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சொல் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், வலதுபுறம் சீரமைக்கப்பட இடைவெளி இருக்க வேண்டும்.

விலை விவரம்:

  • தொகை எண் மதிப்புக்கு நேராக திர்ஹாம் சின்னம் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சின்னம் ஒரே அளவு/எடையில் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சின்னம் அல்லது  “AED” என்ற ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
  • சில்லறை விற்பனை சூழல்களில் திர்ஹாம் தெளிவாக இருக்க வேண்டும்.

விசைப்பலகை:

  • எண் 6 விசையில் திர்ஹாம் சின்னம் இருக்கும்.
  • ஒற்றை மொழி விசைப்பலகையில் விசையின் நடுவே திர்ஹாம் சின்னம் அமைந்திருக்கும்.
  • இருமொழி விசைப்பலகையில் விசையின் இடது மூலையில் திர்ஹாம் சின்னம்
  • விசைப்பலகையில் உள்ள விசையில் திர்ஹாம் சின்னத்தை சுற்றி குறைந்தபட்சம் 2மிமீ தெளிவான இடம் இருக்கும்.

திர்ஹாம் சின்னத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது?

செய்ய வேண்டியவை:

  • உரையுடன் திர்ஹாம் சின்னம் வடிவம் மற்றும் திசை நேராக இருக்க வேண்டும்.
  • எண்களின் விகிதாசார அளவு மற்றும் இடைவெளிக்கு ஏற்ப திர்ஹாம் சின்னம் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சின்னத்தில் போதுமான கான்ட்ராஸ்ட்டை பயன்படுத்தவும்.
  • திர்ஹாம் சின்னம் அல்லது  “AED” என்ற ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
  • எண்களின் இடதுபுறத்தில் திர்ஹாம் சின்னம் இருக்க வேண்டும்.
  • திர்ஹாம் சின்னத்தில் தெளிவான இடைவெளி மற்றும் வடிவவியலைப் பராமரிக்கவும்.

செய்யக்கூடாதவை:

  • திர்ஹாம் சின்னத்தை சிதைக்கவோ அல்லது ‘AED’ உடன் இணைக்கவோ கூடாது
  • திர்ஹாம் சின்னத்தில் கான்ட்ராஸ்ட்டை குறைக்கவோ அல்லது அலங்கார கூறுகளைப் பயன்படுத்தவோ கூடாது
  • திர்ஹாம் சின்னத்தில் தவறான நிலைப்படுத்தல் அல்லது அளவைப் பயன்படுத்த வேண்டாம்.
TAGGED: