54வது தேசிய தினம்: அமீரகத்தில் 3000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க ஆட்சியாளர்கள் உத்தரவு!

அமீரக தேசிய தினம் தினத்தை முன்னிட்டு, நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள 2,937 கைதிகளை விடுவிக்க அமீரக அதிபர் உத்தரவிட்டார். 

கைதிகள் விடுவிப்பு:

அமீரகத்தில் உள்ளூர் மக்கள் உட்பட பல்வேறு நாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் செய்யும் குற்றங்கள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக அவர்கள் சிறையில் அடைப்படுகின்றனர். அப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகளை அமீரக தேசிய தினம் தினத்தை முன்னிட்டு விடுவிக்க ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி 2,937 கைதிகளை விடுவிக்க அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மன்னிப்பு வழங்கப்பட கைதிகளை விடுவிக்க தேவையான நடைமுறைகளைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமீரக அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

துபாய் 

துபாயில் சிறையில் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த 2,025 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

ஆட்சியாளரின் உத்தரவை அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை துபாய் காவல்துறை தொடங்கியுள்ளதாக அட்டர்னி ஜெனரல் சான்சலர் எஸ்ஸாம் இசா அல் ஹுமைதான் கூறினார். 

ஷார்ஜா 

தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் சிறையில் நல்ல நடத்தை உள்ள 366 கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க ஷார்ஜா ஆட்சியளார் மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

ராஸ் அல் கைமா

ராஸ் அல் கைமாவில் 854 சிறை கைதிகளை விடுதலை செய்ய ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை கைதிகள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்பாக அமையும் என்று ஆட்சியாளர் ஷேக் சவுத் அவர்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 

ஆட்சியாளரின் உத்தரவை விரைவில் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவாக முடிக்குமாறு ராஸ் அல் கைமா காவல்துறைக்கு இளவரசர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்கள் உத்தரவிட்டார். 

புஜைரா

புஜைராவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 129 சிறை கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க புஜைரா ஆட்சியளார் மாண்புமிகு ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

தேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் இந்த முயற்சி புத்திசாலித்தனமான தலைமையின் உன்னதமான மனிதாபிமான பார்வையை பிரதிபலிக்கிறது என்று ஆட்சியாளர் ஷேக் ஹமாத் அவர்களை ஃபுஜைரா காவல்துறையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் காபி பாராட்டினார். 

அஜ்மான் 

தேசிய தினத்தை முன்னிட்டு அஜ்மானில் உள்ள 225 கைதிகளை விடுவிக்க ஆட்சியளார் மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி உத்தரவிட்டுள்ளார். விடுவிக்கப்பட்டவர்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைவதால், தஸ்ய தின மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும் ஆட்சியாளர் ஷேக் ஹுமைத் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

TAGGED: