அதிபர் முன்னிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் பொறுப்பேற்பு!

அபுதாபியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புதிய தூதர்கள்  அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களிடம் தங்களது பணி நியமன ஆணைகளை வழங்கி, பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தூதர்கள் பொறுப்பேற்பு:

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான புதிய தூதர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான்  அவர்களை சந்தித்து தங்களது பணி நியமன ஆணைகளை வழங்குவது வழக்கம். 

அமீரகத்தின் 54-வது தேசிய தினம் ‘ஈத் அல் எதிஹாத்’ டிசம்பர் 2 அன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அபுதாபியில் உள்ள கசர் அல் வத்தன் மாளிகையில் புதிதாக பதவியேற்ற தூதர்கள் அமீரக அதிபரை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் உள்ளிட்ட 14 நாடுகளின் தூதர்கள் தங்களது பணி நியமன ஆணைகளை அமீரக அதிபரிடம் வழங்கி பொறுப்பேற்று கொண்டனர். 

சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர், அனைத்துத் தூதர்களும் தங்களது நாட்டுத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளை அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்குத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிம   ன்றத்தின் தலைவருமான மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் உடனிருந்தார்.

நாடுகள் தூதர்கள் பெயர்
இந்தியா தீபக் மிட்டல்
லைபீரியா முகமது மொமோலு துகுலி 
கானாஹமத் ராஷித் துண்டே அலி 
உருகுவேசீசர் ரோட்ரிக்ஸ் சவல்லா 
கிரீஸ்ஸ்டைலியானோஸ் என். கவ்ரில் 
துருக்மெனிஸ்தான்பைராம் பைராமாவ் 
பாலஸ்தீனம்அபீர் அதீ முகம்மது அல் ரமஹி 
இந்தோனேசியாஜூதா நுக்ரகா 
பாகிஸ்தான்சப்கத் அலிகான் 
எதியோப்பியாஜமால் பெகர் அப்துல்லா 
லக்சம்பர்க்சாம் ஸ்ரெய்னெர் 
லெசோதோமன் தபிசெங் அர்சிலியா போலெலி 
பெனின்பதிரொவ் அகுமோன் 
மொனாகோஎவலினே ஜெண்டா 
ஜாம்பியாநுகோம்போ முகா