இனி பள்ளிகளில் கட்டாயமாகும் நண்பகல் தொழுகை.. அமீரக கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில், இஸ்லாமிய மதத்தையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், மாணவர்களிடையே நன்மதிப்புகளை வலுப்படுத்துவன் நோக்கமாகவும் இனி எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒவ்வொரு நாளும் நண்பகல் தொழுகையைச் (லுஹர்) செய்ய நேரம் ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சகம் அறிவிப்பு

இந்த அறிவிப்பு கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ  X தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பள்ளிகள் என்பது அறிவைப் பெறும் இடம் மட்டுமல்ல, மதிப்புகளையும் கற்றுக்கொள்கிற இடமாகும்” என கல்வி தெரிவித்துள்ளது.

இந்த பதிவுடன் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,  மாணவர்கள் தொழுகைக்கான அழைப்பைக் கூறுவது, தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஒன்றாக தொழுவது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

மகிழ்ச்சியில் மாணவர்கள் 

மாணவர்கள் தாங்கள் தொழுகை செய்யும் இடத்தைத் தாங்களே  தயாரிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த இடத்தைத் தயார் செய்யும் முயற்சியில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கு பெறுவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: