ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களை விசிட் விசாவில் அழைத்து வர, அவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் இப்போது புதிய விதிமுறைகளை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) கொண்டு வந்துள்ளது.
| உறவுமுறை | குறைந்தபட்ச மாத சம்பளம் |
| முதல் நிலை உறவினர்கள் (தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள்) | AED 4,000 |
| இரண்டாம் நிலை உறவினர்கள் (சகோதரர், சகோதரி, தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள்) | AED 8,000 |
| மூன்றாம் நிலை உறவினர்கள் (மாமா, அத்தை, அவர்களது மகன், மகள்) | AED 8,000 |
| நண்பர்கள் (உறவினர்கள் அல்லாதோர்) | AED 15,000 |
விண்ணப்பதாரருக்கு தேவையான ஆவணங்கள்:
- விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது உறவுமுறையை நிரூபிக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
- திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டு (Return Ticket)
மற்ற முக்கிய விசா மாற்றங்கள்
- செயற்கை நுண்ணறிவு (AI), பொழுதுபோக்கு, நிகழ்வுகள், சொகுசு கப்பல்கள் (Cruise Ships) போன்ற துறைகளில் உள்ள சிறப்புத் திறமைசாலிகளுக்காக நான்கு புதிய வருகை விசா பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- அமீரகத்தில் நிறுவனம் தொடங்க விரும்புவோர் அல்லது வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்களுக்காக வணிக ஆய்வாளர் விசா (Business Exploration Visa) என்ற புதிய விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- வருகை விசாக்களின் கால அளவுகள் மற்றும் நீட்டிப்பு அதிகாரங்கள் குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, மொத்தமாக ஆறு வகையான தங்குமிடங்கள் (Stays) அறிவிக்கப்பட்டுள்ளன.
- மனிதாபிமான உதவி தேவைப்படுவோருக்கு ஒரு வருட காலத்திற்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்படும். இதை நீட்டிக்கவும் முடியும்.
- விதவைகள் அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் இனிமேல் எந்த ஒரு ஆதரவாளரும் இல்லாமல் குடியிருப்பு அனுமதி பெறலாம்.
- வெளிநாட்டு சரக்கு வாகன ஓட்டுநர்கள் ஒற்றை அல்லது பல பயணங்களுக்கான விசாவைப் பெறுவதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
மாற்றங்களின் நோக்கம்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், திறமையானவர்களை நாட்டிற்கு ஈர்க்கவும் இந்த புதிய விசா விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
