துபாய் & ஷார்ஜாவில் போக்குவரத்து மாற்றம்..! எந்த ரூட்டில் தெரியுமா?

அமீரகம் தனது பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நவீனமயமாக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், துபாயின் நீல லைன் மெட்ரோ மற்றும் எதிஹாட் ரயில் பாதை கட்டமைப்பு ஆகிய இரண்டு முக்கிய திட்டங்கள் காரணமாக நாட்டின் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தின் போக்குவரத்து கட்டமைப்பு

எதிர்காலத்தை நோக்கி வேகமாக முன்னேறும் அமீரகத்தின் முக்கிய உயிர்நாடியாக திகழ்வது அதன் போக்குவரத்து அமைப்பு. குறிப்பாக துபாய் மெட்ரோ நீல லைன் பாதை திட்டம் மற்றும் ஏழு எமிரேட்களை இணைக்கும் எதிஹாட் ரயில் பாதை திட்டம். தற்போது இந்த இரண்டு திட்டங்களின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், இந்த பணிகள் நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

துபாய் நீல லைன் மெட்ரோ திட்டம்

AED 20.5 பில்லியன் செலவில் 30 கி.மீ. தூரத்திற்கு கட்டப்படும் துபாய் நீல லைன் மெட்ரோவில் 14 புதிய நிலையங்கள் இருக்கும். இதில் 15.5 கி.மீ. பாதை நிலத்தடியில் அமையவுள்ளது. தற்போது உள்ள கிரீன் மற்றும் ரெட் லைன் மெட்ரோ பாதைகளுடன் இணைக்கப்பட்டு கட்டப்படும் நீல லைன் திட்டம் நிறைவடையும் பட்சத்தில் துபாயின் முழு மெட்ரோ நீளம் 131 கிலோ மீட்டராக அதிகரிக்கும் மற்றும் மொத்தம் 78 நிலையங்கள் இருக்கும்.

துபாய் மெட்ரோ திறக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நீல லைன் மெட்ரோ 2029 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது

மிர்டிஃப் சிட்டி சென்டர்

மிர்டிஃப் சிட்டி சென்டர் அருகே நீல லைன் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அப்பகுதிக்கு அருகே உள்ள 5வது மற்றும் 8வது தெருக்களுக்கு இடையிலான ரவுண்டானா சந்திப்பு மூடப்பட்டுள்ளது. இந்த பாதைகளில் இருந்து வரும் வாகனங்கள் மிர்டிஃப் சிட்டி சென்டர் மற்றும் அல்ஜீரியா தெரு நோக்கி திருப்பி விடப்படும் என சாலைகளில் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

சிட்டி சென்டர் பார்வையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்று அணுகல் சாலையை RTA வழங்கியுள்ளது. மேலும் மிர்டிஃப் சிட்டி சென்டர் தெருவிலிருந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்காக ‘கோரூப் சதுக்கம்’ அருகே யு-டர்ன் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அகடாமிக் சிட்டி

அகாடமி சிட்டியுடன் இணைக்கப்பட உள்ள நீல லைன் மெட்ரோ பாதை காரணமாக அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ஜெர்மன் இன்டர்நேஷனல் பள்ளிக்கு முன்னால் உள்ள 63வது தெருவை இரு திசைகளிலும் RTA மூடியுள்ளது. ஷேக் சயீத் பின் ஹம்தான் தெருவுக்கு செல்வது மற்றும் அகடாமிக் சிட்டிக்குள் நுழைய மற்றும் வெளியறே மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TAGGED: