அமீரக குடியிருப்பாளர் விசாயின்றி எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்? முழு விவரங்கள் இதோ!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் விசாயின்றி அல்லது ஆன் அரைவல் விசா மூலம் 10 நாடுகளுக்கு பயணிக்கலாம். 

ஆர்மீனியா:

அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் ஆர்மீனியா நாட்டிற்கு பயணிக்கலாம். துபாயில் இருந்து சுமார் 3 மணி 20 நிமிட பயண நேரத்தில் சென்று அழகிய நிலப்பரப்புகளையும், பாரம்பரிய உணவுகளையும், பழமை மற்றும் நவீனத்தை இணைக்கும் கட்டிடக்கலையையும் ரசிக்கலாம். குடியிருப்பாளர்கள் 180 நாட்களுக்குள் அதிகபட்சமாக 90 நாட்கள் வரை தங்கலாம்.

ஜார்ஜியா:

அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் ஜார்ஜியா நாட்டிற்கு பயணிக்கலாம். செல்லுபடியாகும் UAE Residence Card வைத்திருப்பவர்கள் ஜார்ஜியாவில் விசா இன்றி ஒரு வருடத்திற்குள் 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாலத்தீவு

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஆன் அரைவல் விசா மூலம் மாலத்தீவுக்கு பயணிக்கலாம். சுமார் 4 மணி 15 நிமிடப் பயணத்தில், நீலநிற நீரில் மாண்டா கதிர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை அருகில் கண்டு அனுபவிக்கலாம்.

கென்யா 

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation)  பெற்று  கென்யாவிற்கு பயணிக்கலாம்.  சுமார் 5 மணி 15 நிமிடப் பயணத்தில் கென்யாவை அடையலாம். இருப்பினும், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (eTA) விண்ணப்பிப்பது அவசியம்.

தாய்லாந்து

விசா இல்லாமல் அமீரக குடியிருப்பாளர்கள் தாய்லாந்திற்கு பயணிக்கலாம். துபாயில் இருந்து சுமார் 6 மணி நேரம் பயண நேரத்தில் அமைந்துள்ள தாய்லாந்து, சுவையான உணவு மற்றும் ஷாப்பிங்கிற்கு ஏற்ற இடம்.  பாங்காக்கில் உள்ள ஷாப்பிங் மால் மற்றும் சியாங் மாய்-இல் உள்ள யானைகள் சரணாலயத்திலும் நேரத்தைச் செலவிடலாம்.

அஜர்பைஜான்:

அமீரக குடியிருப்பாளர்கள் ஆன் அரைவல் விசா மூலம்  அஜர்பைஜான் நாட்டிற்கு பயணிக்கலாம். வெறும் 2 மணி 55 நிமிட பயணத்தில், குழந்தைகளுடன் சேர்ந்து பாகு பூல்வார்டில் கோண்டோலா சவாரி செய்வது, கொப்புளிக்கும் சேறு எரிமலைகளைப் பார்ப்பது மற்றும் குறு புத்தகங்களின் அருங்காட்சியகத்தைப் (Museum of Miniature Books) பார்ப்பது போன்ற சுவாரஸ்யமான அனுபவங்களைப் பெறலாம்.

இலங்கை: 

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation)  பெற்று  இலங்கை நாட்டிற்கு பயணிக்கலாம். சுமார் 4 மணி 25 நிமிடப் பயணத்தில், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் கோயில்களால் நிறைந்த இலங்கையின் பசுமையை அனுபவித்து, கொழும்பின் பழைய பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம். 

கிர்கிஸ்தான்:

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation) அல்லது இ-விசா (e-Visa) மூலம் கிர்கிஸ்தானுக்கு செல்லலாம். சுமார் 4 மணி நேரத்தில், இங்கே நாடோடிக் கலாச்சாரத்தைத் தழுவி, யூரிட்களில் தங்கி, சோங் கூல் ஏரி அருகே குதிரை சவாரி செய்து, வெந்நீர் ஊற்றுகளில் புத்துணர்ச்சி பெறலாம். 

சீஷெல்ஸ்: 

அமீரக  குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சீஷெல்ஸ் நாட்டிற்கு செல்லலாம். சுமார் 4 மணி 35 நிமிடப் பயணத்தில், பிரகாசமான நீல நிற நீர் மற்றும் சுத்தமான கடற்கரைகள் நிறைந்த இந்த இடத்தில் நீச்சல் மற்றும் நீர் சார்ந்த செயல்பாடுகளுடன் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுக்கலாம். 

உஸ்பெகிஸ்தான்: 

அமீரக குடியிருப்பாளர்கள் இ- விசா மூலம் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பயணிக்கலாம். வரலாறு மற்றும் கட்டிடக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள், பிபி-கானிம் மசூதி, குர் அமீர் கல்லறை போன்ற கட்டிடங்களில் செதுக்கப்பட்டுள்ள அற்புதங்களை இங்கே காணலாம்.