Visa, Emirates ID விண்ணப்பிக்கும்போது தவிர்க்க வேண்டிய புகைப்பட பிழைகள் – ICP வழங்கிய புதிய வழிகாட்டி!

உங்களது விசா அல்லது எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பம் தள்ளுபடியாகாமல் அல்லது தாமதங்களை சந்திக்காமல் இருக்க, தரமான புகைப்படத்தை தருவது அவசியம். மேலும் அந்த புகைப்படங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

விசா விண்ணப்பிக்க செய்ய திட்டமிட்டிருந்தால்,  செல்லுபடியாகும் பாஸ்போர்ட் விதிமுறைகளுக்கு ஏற்புள்ள சமீபத்திய புகைப்படம் இருக்க வேண்டும். விசா இலவச நுழைவு அல்லது வருகை விசா கிடைக்காத நபர்கள், சுற்றுலா விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்படலாம்.

புகைப்படத்திற்கான ICP விதிமுறைகள் (Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security)

பொதுவான தரநிலைகள்:

  • புகைப்படம் 6 மாதத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பரிமாணம்: 40mm x 35mm
  • முகம் புகைப்படத்தின் 70%-80% பகுதியை நிரப்ப வேண்டும் (தலை முதல் தோள்வரை)
  • புகைப்படம் தெளிவாகவும், மை கறைகள், புள்ளிகள் மற்றும் சேதம் இல்லாமல் இருக்க வேண்டும்

 புகைப்படத்திற்கான விதிமுறைகள்:

  • முகம் நேராக கேமராவைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
  • சரியான வெளிச்சம் மற்றும் நிழலில்லாமல், இயல்பான நிறத்தில் முகம் இருக்க வேண்டும்.
  • உயர் குவாலிட்டியில்  புகைப்பட காகிதத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
  • புகைப்படத்தில் ஒளி  சரியாக இருக்க வேண்டும்.
  • கண்கள் திறந்த நிலையில் தெளிவாகத் தெரிய வேண்டும். முடி கண்களை மறைக்கக் கூடாது.
  • புகைப்படத்தில் Background, வெறுமையானதாகவும்,  வெளிர் நிறம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • Red-eye விளைவு இருக்கக் கூடாது.
  • நிறங்கள் கொண்ட லென்ஸ்களுக்கு (tinted) அனுமதி கிடையாது.
  • கண்ணாடி ஃபிரேம்கள் (Frames) கண்களை மறைக்கக்கூடாது.
  • எளிதான, மெல்லிய அல்லது ஃபிரேமில்லாத கண்ணாடிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • தலைப்பாகை, தொப்பி போன்றவை அணிந்து புகைப்படம் எடுத்தல் கூடாது. இவையெல்லாம் மத அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  • புகைப்படத்தில் நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும் (பின்னணியில் பொருட்கள், நபர்கள் இருக்கக்கூடாது).
  • புகைப்படத்தில் இயல்பான முகபாவனையில் இருக்க வேண்டும். 

UAE குடியிருப்பு விசா அல்லது Emirates ID புதுப்பிப்பு செய்யும் போது, சமீபத்திய புகைப்படம் தேவைப்படுகிறது. ICP தங்களது ஆன்லைன் விண்ணப்ப செயலியை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளுடன் ஒத்துப்போகச் செய்துள்ளனர். அதனால், உங்கள் புகைப்படம் இந்த தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.

TAGGED: