இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீரான வானிலையே இருக்கும். இரவில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்றும், வெப்பம் சற்று உயரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. வார இறுதியில், மேற்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்:
இன்றும் நாளையும் (டிச.9 மற்றும் டிச.10) வானம் தெளிவாகவோ அல்லது பகுதி மேகமூட்டத்துடனோ காணப்படும். துபாயில் அதிகபட்ச வெப்பநிலை 31∘C, குறைந்தபட்ச வெப்பநிலை 18∘C வரையும் இருக்கும்.
அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 30∘ C, குறைந்தபட்ச வெப்பநிலை 18∘C வரையும் இருக்கும். இரவில் ஈரப்பதம் உயரும். காற்று மணிக்கு 10 முதல் 20 கி.மீ வேகத்தில் வீசும். சில இடங்களில் 30 கி.மீ வரை செல்லலாம்.
புதன்கிழமை:
நாளை (டிச.10) நாட்டின் மேற்குப் பக்தி மேகமூட்டமாக காணப்படும்.
இரவில் ஈரப்பதம் உயர்வதால், வியாழக்கிழமை அதிகாலையில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வியாழன்
டிச.11 வியாழக்கிழமை அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால், மேற்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அன்றைய தினம் அதிகாலையிலும் மூடுபனி தொடரலாம்.
வெள்ளி
டிச.12 வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாக காணப்படும். தீவுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் காலையில் லேசான மேகங்கள் தோன்றலாம். வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம்.
கடல் நிலை
இந்த வாரம் முழுவதும் அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் கடல் அலைகள் சீற்றமற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வெப்பநிலை சுமார் ஆறு டிகிரி செல்சியஸ் (6°C) வரை குறைய வாய்ப்புள்ளது என கடந்த வாரம் தேசிய வானிலை மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
