படிப்படியாக குறையும் வெப்பநிலை; அமீரகத்தின் இன்றைய வானிலை நிலவரம்!

ஐக்கிய அரபு அமீரக வானிலை  அவ்வப்போது மேகமூட்டமாக இருக்கும், வெப்பநிலையில் சற்று சரிவு ஏற்படும்.

அமீரகத்தில் வானிலை நிலவரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் மழை மேகங்கள் மற்றும் புழுதிக்காற்று வீசும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாட்டின் வெப்பநிலையில் சற்று சரிவு ஏற்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40°C முதல் 44°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பகுதிகளில் வானிலை நிலவரம்:

தேசிய வானிலை மைய தகவலின் படி, பகலில் உள்நாட்டுப் பகுதிகளில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடனும், அவ்வப்போது தூசியுடனும் காணப்படும். உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பநிலை சற்று குறையும். 

கடலோரப் பகுதிகளில் வானிலை:

கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37-42°C ஆகவும், உள்நாட்டுப் பகுதிகளில் 40-44°C ஆகவும், மலைப்பகுதிகளில் 28-33°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பகலில் தூசுப் புயல் உருவாகி, இன்று இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை நேரங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது. இன்று ஈரப்பதம் 85-90% ஆக இருக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

அபுதாபி மற்றும்  ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் கடந்த செப்.10 அன்று காலை கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  இதனால் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகள் மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் மாறும் வேக வரம்புகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தி இருந்தது. 

TAGGED: