ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மூன்றாவது நாளாக நிலையற்ற வானிலை நீடிக்கிறது. நாடு முழுவதும் பரவலாக வெவ்வேறு அளவுகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மேகமூட்டம் காணப்படும். பலமான காற்று மணிக்கு 50 கி.மீ வேகம் வரை வீசக்கூடும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிறு வானிலை ஓரளவுக்கு சீராகத் தொடங்கும். இருப்பினும், குளிர்ச்சியான சூழல் நிலவும். பலமான காற்று வீசுவதுடன் கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருக்கும்.
வெள்ளிக்கிழமை வரை வானிலை மாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்கவும், கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
