விளம்பரதாரர் அனுமதி முதல்  வரை துபாய் இளவரசருக்கு பதவி உயர்வு வரை இந்த வாரம் நடைபெற்ற முக்கிய அறிவிப்புகள்!

காசாவுக்கு விமானம் மூலம் உதவி!

பாலத்தீனியர்களுக்கு ஜோர்டானுடன் இணைந்து விமானம் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது அமீரகம். ஜூலை 28ஆம் தேதி வரை காசாவுக்கு வழங்கப்பட்ட சர்வதேச உதவிகளில் 44 சதவீதத்திற்கும் அதிகமானவை அமீரகத்தின் உதவியாகும்.

 ஆபரேஷன் சிவாலரஸ் நைட் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக காசாவில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 54வது முறையாக விமானம் மூலம் உதவிகளை அமீரகம் வழங்கியுள்ளது. 193 விமானங்கள் மூலம் 3,725 டன்களுக்கும் அதிகமான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. 

அக்டோபர் 2023 முதல் நவம்பர் 2024 வரை, ஐக்கிய அரபு அமீரகம் காசாவுக்கு 828 மில்லியன் டாலர்  நிதியுதவி வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த நெருக்கடியான சூழலில் உலக அளவில் அதிக உதவு  வழங்கிய நாடுகளில் ஒன்றாக  அமீரகம் திகழ்கிறது.

கோடையின் இறுதி கட்டம்!

அமீரகம் தற்போது கோடையின் இறுதிக்கட்டமான ‘வாக்ரத் அல் மிர்ஸம்’- ஐ அனுபவித்து வருகிறது. இது ஆகஸ்ட் 10 வரை நீடிக்கும் என வானியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டம் “ஜம்ரத் அல் காயிஸ்” அல்லது “coal of the summer,” என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பாலைவனத்தில் மிகக் கடுமையான வெப்பத்தை கொண்டு வரும். இதைத் தொடர்ந்து, ஈரப்பதம் அதிகரிக்கும் மற்றும் ஹஜர் மலைத்தொடர் போன்ற மலைப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் அதிகமாகக் காணப்படும்.

வக்ரத் அல் மிர்ஸம் என்பது கோடைகாலத்தின் பல நிலைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நிலையும் சுமார் 18 நாட்கள் நீடிக்கும். இது வக்ரத் அல் சுரையா, வக்ரத் அயூக் மற்றும் வக்ரத் அல் அஸ்ஸாயா ஆகிய நிலைகளுக்குப் பிறகு வருகிறது. இதற்குப் பிறகு வரும் வக்ரத் அல் நுஜைமத் (சுஹைல்), குளிர்ச்சியான வானிலை வருவதற்கான அறிகுறியாகும்.

வைரங்களை மீட்ட துபாய் காவல்துறை!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் AED 1.1M மதிப்புள்ள வைரங்கள் நிறைந்த பையை தனது பை என தவறுதலாக நினைத்து வங்கதேசத்துக்கு எடுத்து சென்ற பயணி. உரிமையாளர் கொடுத்த புகாரை தொடர்ந்து பையை மீட்டது துபாய் காவல்துறை.

துபாயில் வசிக்கும் நகைக்கடைக்காரர் ஒருவர் வளைகுடா நாட்டில் நடைபெறும் நகை கண்காட்சியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். அவரிடம் வைரங்கள் நிறைந்த 4 பைகள் இருந்த நிலையில் வங்கதேசத்துக்கு செல்லவிருந்த ஒரு பயணி தனது பை என நினைத்து தவறுதலாக வைரங்கள் நிறைந்த பையை எடுத்து வங்கதேசத்துக்கு சென்றுள்ளார்.

தனது பை இல்லை என்று தெரிந்த நகைக்கடைக்காரர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். டாக்காவில் உள்ள அமீரக தூதரகத்தை தொடர்பு கொண்டு வைரங்கள் நிறைந்த பையை பையை மீட்டு அமீரகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ப்ரோமோஷன் செய்ய அனுமதி தேவை!

பணம் பெற்றுக்கொண்டோ அல்லது இலவசமாகவோ சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் எவரும் விளம்பரதாரர் அனுமதி (Advertiser Permit) பெற வேண்டும் என அமீரக ஊடக கவுன்சில் அறிவித்துள்ளது.

விளம்பரதாரர் அனுமதி (Advertiser Permit) முதல் மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அமீரக ஊடக கவுன்சில் தெரிவித்துள்ளது. சமூக ஊடக விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை, தொழில்முறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களில்  விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக ஊடக கவுன்சில் ‘விளம்பரதாரர் அனுமதி’ (Advertiser Permit) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதிபருக்கு நன்றி தெரிவித்த துபாய் இளவரசர்!

நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைமை தளபதியாகப் பதவி உயர்வு பெற்ற துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் நஹ்யான் அவர்கள், முக்கிய பொறுப்பை அளித்ததற்காக அமீரக அதிபரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஜூலை 31 அன்று அபுதாபியில் உள்ள அல் ஷாதி மாளிகையில் நடைபெற்ற இந்தசந்திப்பின் போது, அபுதாபியின்  இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்  அவர்களும் உடனிருந்தார்.


TAGGED: