உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு; டாப் 5-இல் எத்திஹாட் ஏர்வேஸ்!

சமீபத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, சில நிமிடங்களிலே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே  உயிர் தப்பினார். 

இந்நிலையில் AirlineRatings.com இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் (Emirates), எத்திஹாட் (Etihad), ஃபிளைதுபாய் (flydubai) மற்றும் ஏர் அரேபியா (Air Arabia) ஆகியவை இடம் பிடித்துள்ளன.

முழு சேவை விமான நிறுவனங்கள்:

“ஏர் நியூசிலாந்து (Air New Zealand) உலகின் பாதுகாப்பான முழு சேவை விமான நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) மற்றும் எமிரேட்ஸ் (Emirates) ஆகியவை உலகின் பாதுகாப்பான முழு சேவை விமான நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. “எத்திஹாட்” ஏர்வேஸ் (Etihad Airways) ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் (Low-cost carriers):

    • ஃபிளைதுபாய்  மற்றும் ஏர் அரேபியா ஆகியவை உலகின் பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
    • HK எக்ஸ்பிரஸ்  குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    AirlineRatings.com-ன் CEO ஷரோன் பீட்டர்சன், உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களுக்கான தரவரிசை குறித்து கூறுகையில், 

    “முதல் இடத்திற்காக ஏர் நியூசிலாந்துக்கும் (Air New Zealand) குவாண்டாஸுக்கும் (Qantas) இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. வெறும் 1.50 புள்ளிகள் மட்டுமே இரு நிறுவனங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருந்துள்ளது.

    இரண்டு விமான நிறுவனங்களுமே மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களையும், விமானி பயிற்சிகளையும் பின்பற்றினாலும், குவாண்டாஸை விட ஏர் நியூசிலாந்துக்கு புதிய விமானங்கள் அதிகம் உள்ளன.

    மூன்றாம் இடத்தில் மூன்று விமான நிறுவனங்கள் சமமான புள்ளிகளுடன் ஒரே இடத்தைப் பிடித்துள்ளன. “பைலட் திறன், பாதுகாப்பு நடைமுறைகள், விமான எண்ணிக்கை, சம்பவங்கள்,  இவை அனைத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்றதால், வேறுபடுத்த முடியவில்லை” என்று கூறினார்.

    விமான நிறுவனங்கள் எப்படித் தர வரிசைப்படுத்தப்படுகின்றன?

        விமான நிறுவனம் தர வரிசையில் இடம்பிடிப்பதற்கான முக்கியமான காரணிகள் பின்வருமாறு:

        • கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த சீரிய சம்பவங்கள்
        • விமானங்களின் வயது
        • விமானங்களின் எண்ணிக்கை
        • சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகளின் விகிதம்
        • நிதி நிலைத்தன்மை
        • IOSA சான்றிதழ் (IATA Operational Safety Audit)
        • ICAO நாடு ஆய்வில் தேர்ச்சி
        • பைலட் திறமையும் பயிற்சியும்
        • சிறப்பு விமானிகள் மற்றும் விமானப் பாதுகாப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசனைகளும் இடம்பெறுகின்றன.

        விமானப் பயணம் எவ்வளவு பாதுகாப்பானது

        அண்மையில் வெளியான ஒரு விமானப் பாதுகாப்பு ஆய்வின்படி, 2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் உயிரிழப்பானது சுமார் 1.37 கோடியில் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்ததாக தெரியவந்தது.

        இதன் ஒப்பீட்டாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, 2023-ல் சாலை விபத்துகளால் 11.9 லட்சம் பேர் உயிரிழந்தனர், இது நிமிடத்திற்கு இரண்டு பேர் உயிரிழப்பதாகும்.

        இந்த புள்ளிவிவரங்கள் விமானப்பயணம் அதிகமாக பாதுகாப்பானது என்பதை காட்டினாலும், 2024-ம் ஆண்டு டிசம்பரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2023-ல் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் (IATA) பதிவு செய்த 72 உயிரிழப்புகளை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் என நிறுவனம் தெரிவித்தது.

        TAGGED: