தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? தெரிந்திருக்க வேண்டிய வழிமுறைகள்!

தீப்பற்றுவது ஒரு அபாயகரமான மற்றும் எதிர்பாராத நிகழ்வு. ஆகவே திடீரென நாம் வாழும் அல்லது வேலை செய்யும் இடங்களில் தீப்பற்றினால் அதில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்ள  வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். கோடை வெயில், மின் கசிவு உள்ளிட்ட காரணங்களால் ஆங்காங்கே தீ  விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன.

 தீ விபத்து ஏற்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது:

  • விரைவாக மற்றவர்களுக்கும், 997 எண்ணிற்கு அழைத்து,  தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். 
  • அருகில் தீயணைப்பான் (Fire Extinguisher) இருப்பின், அதைக் கொண்டு தீயை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
  • தீப்பற்றி எரியும் பட்சத்தில் தீப்பற்றி எரியாத சில இடங்களில் அறைக்கதவுகளை மூடலாம், பூட்ட வேண்டாம்.  ஏனெனில் தீ எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவை. அதை தடுப்பதற்கு இதுவும் ஒரு வழி. மேலும் துளைகளை ஈர துணிகளை வைத்து அடைக்கலாம். 
  • தீ விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள், புகையை உள்ளிழுப்பதால் ஏற்படுகின்றன. எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கைக்குட்டை கிடைத்தால், அதை தண்ணீரில் நனைத்து மூக்கையையும், வாயையும்  மூடிக்கொள்ள வேண்டும். 
  • உங்கள் ஆடை மீது தீப்பற்றினால், தரையில் படுத்து உருள வேண்டும். இது தீயை அணைக்கும் ஒரு சிறந்த முறையாகும்.
  • உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் தீப்பற்றிவிட்டால், வேகமாக ஓடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக தவழ்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் நெருப்பு எப்போதுமே மேல் நோக்கி எரியக் கூடியது என்பதால், புகையும் மேல் நோக்கி எழும். ஆனால் தரையில் புகை இருக்காது.
  • நீங்கள் வெளிநாடுகளில் இருப்பின், உங்களது கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட தேவையான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு வெளியேறலாம். 

 தீ அபாயத்தை தவிர்க்க முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள்:

  • மெழுகுவர்த்தி, அடுப்பு உள்ளிட்ட பொருட்களை தேவை முடிந்ததும் அணைத்து விடுங்கள். அவற்றை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
  • மேல் மாடி, பால்கனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எளிதில் தீப்பற்றக்கூடிய  பொருட்களை அவ்வபோது அகற்றுங்கள்.
  • வீட்டில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் இணைப்புகள் சரியுள்ளனவா என்று உறுதி செய்யுங்கள். பழுதான சாதனங்கள் இருப்பின் அவற்றை நீக்கவும்.  
  •  பல மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்க பலமடங்கு பிளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதிகபட்சம் 3,000 – 3,500  watts வரைதான் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பல பிளக்குகளை ஒருவரொன்றாக தொடர்ச்சியாக இணைக்காதீர்கள்.
  • பிளக்கை பீரோ, டேபிள் போன்றவற்றின் பின்னால் மறைத்து வைக்காதீர்கள் – வெப்பம் தேங்கி தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • ஈரப்பதமுள்ள இடங்களிலும் வெளியிலும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
  • VDS, DIN EN 14604 சான்றிதழ்கள் மற்றும் Q-லேபிள்  உள்ள புகை எச்சரிக்கை அலாரங்கள் பொருத்தலாம்.  
  • அனைவரும் தீ அணைக்கும் கருவிகளை பயன்படுத்தும் முறையை முன்னதாகக் கற்றுக்கொள்வது அவசியம் 

TAGGED: