ஷார்ஜாவில் அறிமுகமாகியுள்ள புதிய AI பார்க்கிங் சிஸ்டம்; என்னென்ன அம்சங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன

ஷார்ஜாவில் புதிதாக 90,000-க்கும் மேற்பட்ட இடங்களில் AI பார்க்கிங் பகுதிகள் அறிமுகமாகியுள்ளன. இது, நகரில் நெரிசலை குறைத்து, வாகன ஓட்டத்தை மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்?  

  • வாகனம் நிறுத்துமிடத்திற்குள் நுழையும் போது உரிம பிளேட்டுகள் தானாகவே பதிவு செய்யப்பட்டு கணினி தரவுகளுடன் இணைக்கப்படும்.
  •  பயனர்கள் “Mawqef” செயலியை பயன்படுத்தி விடுபட்டிருக்கும் பார்க்கிங் பகுதிகளை தெரிந்து கொள்ளலாம்.
  • பதிவு செய்யப்பட்ட உரிம பிளேட்டுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் நிலுவையில் (pending) உள்ள கட்டணங்களைப் பார்த்து கிரெடிட் கார்டு அல்லது இ-வாலட் மூலம் செலுத்தலாம்.
  • பயனர்கள் ஒரு நாள் முதல் ஒரு வருடம் வரை பார்க்கிங் சந்தாக்களை இதில் வாங்கலாம்.

அபராதத்திற்கு சலுகைக் காலம்:

பார்க்கிங் நேரத்தை கடந்து நிற்கும் வாகானங்களுக்கு அபராதம் விதிக்கபடுவதற்கு முன் 72 மணி நேரம் (இரண்டு நாட்களுக்கு) சலுகை காலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தா திட்டங்கள்: 

பார்க்கிங் சந்தாவை தினசரி திட்டம் முதல் வருடாந்திர திட்டம் வரை, பல்வேறு நீண்ட கால சந்தா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: