🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

குளோபல் வில்லேஜ் சீசன் 30-க்கான தேதி அறிவிப்பு!

துபாயில் நடைபெற உள்ள குளோபல் வில்லேஜ் சீசன் 30க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜ் சீசன் 30 தேதி அறிவிப்பு:

துபாயில் குளோபல் வில்லேஜ் சீசன் 30க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2026 மே 10 வரை நடைபெற உள்ளது.

1996ஆம் ஆண்டு துபாய் க்ரீக்கில் சில பெவிலியன்களுடன் துவங்கிய குளோபல் வில்லேஜ், இன்று முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த சீசனில் 10.5 மில்லியன் பார்வையாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்:

–  பல்வேறு நாடுகளின் பண்பாட்டு பெவிலியன்கள்

–  பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உணவுகள்

–  கலாச்சார நிகழ்ச்சிகள்

–  ஷாப்பிங் மற்றும் கலை நிகழ்ச்சிகள். மேலும், 30ஆம் ஆண்டு மைல்கல்லை குறிக்கும் வகையில் இந்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விவரம்:

இதற்கான டிக்கெட்டுகள் அக்டோபர் மாதம் குளோபல் வில்லேஜ் துபாய் இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் AED 25 முதல் AED 30 வரை நுழைவு கட்டணம் இருந்தது. 

மேலும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நுழைவு இலவசமாக இருந்தது.

கடந்த சீசனில் நடைபெற்ற நிகழ்வுகள்:

கடந்த சீசனில் 40,000 நிகழ்ச்சிகள், 200க்கும் மேற்பட்ட உணவகங்கள், மற்றும் புதிய ஆண்டை வரவேற்க 7 வெவ்வேறு நேரங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடந்த பருவத்தில் 30 பெவிலியன்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரம்பரியக் கலைகள், உணவுகள், நிகழ்ச்சிகள் மற்றும் தயாரிப்புகள் இடம் பெற்றிருந்தன. மேலும் 30வது ஆண்டு விழா பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.