துபாயில் சீனப் புத்தாண்டு விற்பனை 90 சதவீதம் வரை தள்ளுபடி; மேலும் திட்டமிடப்பட்டுள்ள கொண்டாட்டங்கள் 

சீனப் புத்தாண்டு என்பது உலகளவில் பரவலாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும், இந்த கொண்டாட்டம் வருகிற பிப்ரவரி 2 வரை தொடரவுள்ளது.

இதற்காக, துபாய் முழுவதும் முன்னணி பிராண்டுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடியும், பரிசுகள் வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 

என்னென்ன பரிசுகள் வெல்லும் வாய்ப்பு

நிசான் பட்ரோல், ஜெட்டூர் 2025 மற்றும் BMW 8 சீரிஸ் போன்ற புதிய கார்கள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அற்புதமான பரிசுகளை வெல்ல ஷாப்பிங் செய்பவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 

பொழுதுபோக்கு மையங்கள்:

குளோபல் வில்லேஜ், ஜுமைரா புர்ஜ் அல் அரப், மோஷன்கேட் துபாய், AYA யுனிவர்ஸ், கிரீன் பிளானட், லெகோலாண்ட் துபாய் மற்றும் பல பொழுதுபோக்கு மையங்கள் இந்த கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

அதே சமயம் உணவு பிரியர்கள் துபாயின் முன்னணி உணவகங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உணவு அனுபவங்களை அனுபவிக்கலாம்.

உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல்களில் தங்கும் பேக்கேஜ்கள் மூலம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வானவேடிக்கை & ட்ரோன் கொண்டாட்டங்கள்:

சீனப் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் திட்டமிடப்பட்டுள்ள வானவேடிக்கை & ட்ரோன் ஷோ கொண்டாட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

வானவேடிக்கை

ஜனவரி 28, 9 PM – Riverland Dubai at Dubai Parks and Resorts

ஜனவரி 29, 9 PM – Global Village

ஜனவரி 30, 9 PM – Dubai Festival City Mall (இலவச நுழைவு)

ஜனவரி 31, 10 PM – Burj Khalifa

ட்ரோன் ஷோ

பிப்ரவரி 10, 8 PM – Burj Al Arab Aerial Display (இலவச நுழைவு)