மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயங்கும் ரயில் பஸ்; அறிமுகப்படுத்தவிருக்கும் துபாய்

3D அச்சிடப்பட்ட, சூரிய ஒளியில் இயங்கும், தானியங்கி பொதுப் போக்குவரத்து முறையான ‘ரயில் பஸ்’ (Rail Bus) திட்டத்தை உலக அரசு உச்சி மாநாட்டில் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்  (RTA) காட்சிப்படுத்தியது.

துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்  ‘ரயில் பஸ்சை காட்சிப்படுத்தியது. இந்த ரயில் பஸ் திட்டங்களை துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று (பிப்.10) மதிப்பாய்வு செய்தார்.

RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மட்டர் அல் தாயர், புதிய துபாய் ரயில் பஸ் குறித்து விளக்கினார். அவர் கூறுகையில், ரயில் பஸ் என்பது சூரிய சக்தியில் இயங்கும், மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த, துபாயின் பொது போக்குவரத்து.  நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், சுற்றுலா பயணியர்களுக்கும் பாதுகாப்பான, சீரான மற்றும் நிலையான பயணத்தை உறுதி செய்கிறது” என்றார்.

ரயில் பஸ்:

  • ரயில் பாதைகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலகுரக ரயில் பெட்டி ஆகும்.
  • 3D அச்சிடப்பட்ட, சூரிய ஒளியில் இயங்கும்.
  • தானியங்கி முறையில் இயங்கும்.
  • இந்த ரயில் பஸ் 11.5 மீட்டர் நீளமும், 2.65 மீட்டர் அகலமும் கொண்டதாக காப்ஸ்யூல் வடிவத்தில் இருக்கும். 
  • மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில், 40 பயணிகளை  ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
  • தங்கம் மற்றும் கருப்பு நிறம் கலந்த வெளிபுறத்துடன் உள்ள இந்த ரயில் பஸ்ஸில் இரண்டு வரிசை ஆரஞ்சு இருக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான இருக்கைகளும் உள்ளன.
  • ஒவ்வொரு பெட்டியிலும் 22 இருக்கைகள் உள்ளன.
  • குறைந்த செலவில்,  நகரம் முழுவதும் சீரான போக்குவரத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய பொதுப் போக்குவரத்து முறை கொண்டுவரப்பட உள்ளது.
  • RTA-வின் கூற்றுப்படி, மற்ற போக்குவரத்தை விட ரயில் பஸ் போக்குவரத்திற்கான விலை 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • ரயில் பஸ்ஸின் உள்ளமைப்பு, இருக்கைகள், பேனல்கள், கூரைகள், தரை மற்றும் கதவுகளின் உள்ளமைப்புகள் ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்ட மைக்ரோஃபைபர் மற்றும் PET பிளாஸ்டிகை கொண்டு செய்யப்பட்டுள்ளன. 
  • புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக, இது இந்த ரயில் பஸ் திட்டம் உள்ளது. 
  • போக்குவரத்து நெரிசலையும், கார்பன் வெளியீட்டையும் குறைப்பதற்கான நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  
TAGGED: