- ICP-யின் அதிகாரப்பூர்வ பக்கமான smartservices.icp.gov.ae என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்,
- அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘Smart Services’ பொத்தானை கிளிக் செய்து, ‘File Validity’ என்பதை தேர்வு செய்யவும்.
- அங்கு உங்களின் விசாவின் வகையை உறுதி செய்த பின் பாஸ்போர்ட் விவரங்களை கொடுக்க தயாராகவும்.
- பின் பாஸ்போர்ட் எண், காலாவதியாகும் தேதி போன்றவற்றை உள்ளிடவும்.
- பிறகு உங்களின் சொந்த நாட்டை தேர்வு செய்யவும், பக்கத்தில் தொடர்புடைய எண்கள் தோன்றும்.
- இறுதியாக கேப்ட்சா கோடை உறுதி செய்த பின், உங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளமுடியும்.
இது தவிர UAE பாஸ் செயலியைப் பயன்படுத்தி உங்கள் விசா செல்லுபடியை எளிதாகச் சரிபார்க்கலாம். அதில் உள்நுழைந்து, கீழே உள்ள ‘Documents’ ஐ கிளிக் செய்து, அங்கு உங்கள் குடியிருப்பு விசாவைக் கண்டறியவும். இந்த செயலி உங்கள் அனைத்து முக்கியமான ஆவணங்களுக்கும் விரைவான அணுகலை வழங்குகிறது மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான சேவைகளும் இங்கு கிடைக்கிறது.
விசா நிறைவடைந்து தங்கி இருப்பதற்கான அபராதங்களை தெரிந்து கொள்வது எப்படி?
விசா காலம் நிறைவடைந்த பின், நாட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் AED 50 அபராதமாக விதிக்கப்படும், முன்னதாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது, தற்போது அபராதம் விதிக்கப்படும் நிலையில் அதனை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.
- https://www.gdrfad.gov.ae என்ற இணைய பக்கத்திற்குள் நுழைய வேண்டும்.
- இணைய பக்கத்தில் காணப்படும் ‘Fines Inquiry’ என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு நுழையும் பக்கத்தில் fines issued against you என்பதை தேர்வு செய்து, File எண், UDB எண், எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் எண் என்ற விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்யவும்.
- தேர்வு செய்த பின் அது தொடர்பான விவரங்களை உள்ளிட்ட பின், உங்களின் அபராத விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
- (இது துபாய்க்கு மட்டுமே பொருந்தும் பட்சத்தில், மற்ற எமிரேட்டில் குடியிருப்பாளர்கள் ICP முகவரியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது)
