🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாயில் நடைபெற்ற மேஜிக் நிபுணர் விக்னேஷ் பிரபுவின் மேஜிக் & மெண்டலிசம் நிகழ்ச்சி!

துபாயில் பிப்.14 அன்று சென்னையைச் சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர்  விக்னேஷ் பிரபுவின் மேஜிக் & மெண்டலிசம் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

புரோ ஈவன்ட்ஸ் சார்பில் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த பிரபல மன நுட்ப கலைஞர் விக்னேஷ் பிரபு பங்கேற்ற மேஜிக் இந்நிகழ்ச்சி அல் கூஸ் பகுதியில் உள்ள அம்பாசிடர் இன்டர்நேஷனல் அகாடமி வளாக அரங்கில் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் எண்ணங்களை கணிக்கும் உளவியலை பயன்படுத்தி விக்னேஷ் பிரபு பல்வேறு வகையான மாயா ஜால காட்சிகளை அரங்கேற்றினார்.


குறிப்பாக மெண்டலிசம், டைம் டிராவல், முன்கூட்டியே கணித்தல் மற்றும் ஹிப்னாடிசம் போன்ற பல்வேறு மாயா ஜாலங்களை நிகழ்த்தி பெரியவர், குழந்தைகள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை இனியா, டாக்டர். சஜீர் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  தொழிலதிபர் திரு. கண்ணன் ரவி வழங்கிய மேஜிக் & மெண்டலிசம் நிகழ்ச்சியில் பிரபல மேஜிக் நிபுணர் விக்னேஷ் பிரபு இரண்டரை மணி நேரம் இடைவிடாமல், ஒருவராகவே ஒட்டுமொத்த நிகழ்ச்சியை தன் வசப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் .

TAGGED: