எச்சரிக்கை! ‘Babies’ Magic Tea’ கிரைப் வாட்டரில் ஆல்கஹால்: பயன்பாட்டை உடனடியாக நிறுத்த அமீரக அரசு உத்தரவு

குழந்தைகளுக்கான ‘Babies’ Magic Tea – Baby Sleep Gripe Water’ தயாரிப்பில் குறிப்பிடப்படாத ஆல்கஹால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

அமீரகத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் “Babies’ Magic Tea – Baby Sleep Gripe Water” என்ற கிரைப் வாட்டரில் குறிப்பிடப்படாத ஆல்கஹால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் குறிப்பிட்ட தயாரிப்புத் தொகுப்பை (Batch) சந்தையில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அமீரக மருந்து வாரியம் (Emirates Drug Establishment – EDE) உத்தரவிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் 45 ஆம் எண் நிர்வாகச் சுற்றறிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தயாரிப்பில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது பற்றிய விவரங்கள் அதன் மூலப்பொருட்கள் பட்டியலில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், மேலும் இந்தத் தயாரிப்பு அமீரகத்தில் விற்பனை செய்வதற்கான அனுமதியை பெறவில்லை என்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு அறிவுரை 

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் (Ministry of Climate Change and Environment) இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், குறிப்பாக 25122bw என்ற பாதிப்புக்குள்ளான தயாரிப்புத் தொகுப்பை எண்ணைக் (Batch Number) கொண்ட பொருட்களைப் பெற்றோர்கள் உடனடியாகச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் உறுதிசெய்யும் பொருட்டு, இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவதையும் புதிதாக வாங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு அமீரக மருந்து வாரியம் (EDE) பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அனைத்து சுகாதார மையங்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் இந்தச் சுற்றறிக்கையைப் பின்பற்றி, குறிப்பிட்ட அந்தத் தயாரிப்புத் தொகுதியை சந்தையிலிருந்தும் விற்பனை மையங்களிலிருந்தும் உடனடியாகத் திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.