இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் பயணத்திற்கு முன்பே மருத்துவக் காப்பீடு பெற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், Cashless சிகிச்சை, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் செலவுகள் உள்ளிட்டவை காப்பீட்டில் உள்ளதா என்பதை அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு எதிர்பாராத நோய்கள் அல்லது அவசர மருத்துவ தேவைகள் ஏற்படும் போது, அவர்களுக்கு போதிய காப்பீடு இல்லாததால் பெரும் மருத்துவக் கட்டணம் ஏற்படுகிறது.
இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அந்தப் பெரிய தொகையை செலுத்த முடியாமல் அவதிப்படும் பல சம்பவங்கள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.
கொடியேற்ற துபாய் ஆட்சியாளர் அழைப்பு
அமீரகத்தில், ஆண்டுதோறும் நவ.3ம் தேதி ‘தேசியக் கொடி நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், வீடுகள் ஆகியவற்றில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் அமீரக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு தனது எக்ஸ் தளத்தில் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அழைப்பு விடுத்துள்ளார்.
VAT வரியை திரும்ப பெற புதிய App
அமீரகத்தில், சுற்றுலாப் பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 5% VAT வரியை, அவர்கள் திரும்ப பெறுவதற்காக AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ‘Planet Tax Free’ App உருவாக்கப்பட்டுள்ளது. இந்த App, பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும். இது, Zayed, Dubai, Sharjah ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் முழுமையாக செயல்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி விமான நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று வரிப் பணத்தை (VAT Refund) திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. இதற்காக ‘Planet‘ என்ற புதிய செயலியை கூட்டாட்சி வரி ஆணையம் (FTA) அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் அதிவேக வரி ரீஃபண்ட் சேவையாகக் கருதப்படும் இந்த புதிய வசதி, Planet Tax Free நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய Etihad ரயில் நிலையங்கள் திறப்பு
அபுதாபியின் Al Dhafra பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், Etihad ரயில் நிறுவனம் Zayed City மற்றும் Liwa ஆகிய இரு இடங்களில் புதிய ரயில் நிலையங்களை அமைத்துள்ளன. இவை, வரும் நவ.30ம் தேதி திறக்கப்பட உள்ளன. விழாக் காலங்களில் விரைவாகவும் எளிதாகவும் பயணிக்க இது பெரிதும் உதவும்.
புதுப்பொலிவு பெரும் Dubai Fountain
Dubai Fountain ஏரியை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வளைந்த பூவிதழ்கள் போன்ற வெள்ளி நிறத்திலான உலோக அமைப்புகள் நிறுவப்பட்டு வருகிறது. இதிலிருந்து தண்ணீர் கீழ்நோக்கி அருவி போல் கொட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
