ஹஜ் 2025; அனுமதியின்றி சென்றால் அபராதம் மட்டும் அல்ல, நாடு கடத்தலும் உண்டு!

2025 ஹஜ் பருவம் நெருங்கி வரும் நிலையில், ஹஜ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும்  தண்டனைகளை நினைவுபடுத்தியுள்ளது சவூதி அரேபியா.

இந்தக் கட்டுப்பாடுகள் ஹஜ் பருவம் முடிவடையும் வரை தொடரும் என்றும் சவூதி சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.

சவூதி சுற்றுலா அமைச்சகம் ஹஜ் 2025-ல் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்  பின்வருமாறு:

  • செல்லுபடியாகும் ஹஜ் அனுமதி இல்லாமல்  ஹஜ் செய்ய முயற்சித்தால், 10,000 சவூதி ரியால்கள் தோராயமாக AED 9,700  அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்திரீகர்களுக்கும், பொருந்தும். அனுமதியின்றி பல யாத்ரீகர்களை அழைத்து சென்று விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் 15 நாட்கள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
  • நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 
  • விதிமுறைகளை மீறுபவர்களின் பெயர்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
  • அனுமதியின்றி ஹஜ் செய்ய முயற்சிப்பது அல்லது அனுமதியில்லாத யாத்திரிகர்களை  அழைத்து செல்லும் குடியிருப்பாளர்களுக்கு  கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அவர்களுக்குத் தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு செல்ல தடை விதிக்கப்படும்.
  • அங்கீகரிக்கப்படாத ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும்  யாத்ரீகர்களுக்கு மெக்காவில் விருந்தோம்பல் முறையானது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் துல்-கிஅதா 1, 1446 ஹிஜ்ரி (ஏப்ரல் 29, 2025) முதல் ஹஜ் பருவம் முடியும் வரை அமலில் இருக்கும்.

TAGGED: