பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை வழங்கும் அபுதாபியில் உள்ள BLS மையம் புதிய இடத்தில் ஆகஸ்ட் 25 முதல் செயல்படத் தொடங்கியதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அபுதாபியில் உள்ள BLS மையம் அல் ரீம் தீவில் உள்ள ஷாம்ஸ் பூட்டிக் மாலில் இயங்கி வந்த நிலையில் தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகத்தின் செய்தி குறிப்பு
இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் ஆகஸ்ட் 24 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அல் ரீம் தீவில் உள்ள ஷாம்ஸ் பூட்டிக் மாலில் இயங்கி வந்த BLS மையம் கீழ்க்கண்ட முகவரியில் அல் ரீம் தீவில் உள்ள வஃப்ரா சதுக்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25, 2025 முதல் புதிய இடத்தில் செயல்பாடுகளைத் தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய BLS மையத்தின் முகவரி: Wafra Square Building, 3rd Floor, Office No. 342, Al Reem Island, Abu Dhabi
பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான சேவைகள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட தேதியிலிருந்து புதிய BLS வளாகத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
