துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற ஆண்ட்ரியா ஜெர்மியா இசை நிகழ்ச்சி!

துபாய் எடிசலாட் அகாடமியில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் ஆண்ட்ரியா ஜெர்மியா இசை நிகழ்ச்சி அக்டோபர் 18, 2025 அன்று மாலை 6 மணி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவுடன், பாடகி அம்ருதா சுரேஷ்,  DJ-வாக DJ பிளாக்  மற்றும் தொகுப்பாளராக KPY குரேஷி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இசைக்கலைஞர் கார்த்திக் தேவராஜும் பங்கேற்றார்.  

Sems event managing கம்பெனியும், கலைவாணி சங்கர் அவர்களும் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சர் KRG குழும தலைவர் திரு. கண்ணன் ரவி அவர்கள் ஆவார். இந்நிகழ்வின் மீடியா பார்ட்னர் தமிழ் Buzz துபாய் மற்றும் ரேடியோ பார்ட்னர் gilli106.5fm ஆகும்.

இந்நிகழ்வினை KPY குரேஷியும், VJ ஐஸ்வர்யா-வும் தொகுத்து வழங்க, முதலில் பாடகி அம்ருதா சுரேஷும், அவரைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவும் சினிமா பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். முன்னதாக DJ பிளாக் சினிமா பாடல்களை ஒலிபரப்பி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

இந்நிகழ்வில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரம் காத்திருந்து, அழுத குட்டி ரசிகை ஒருவரின் ஆசையை அறிந்த ஆண்ட்ரியா, அவரை மேடைக்கு அழைத்து அவருடன் நடனமாடினார். 

இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு பாடல்களை கேட்டு  நடனமாடி மகிழ்ந்தனர்.

தொடர்புக்கு: Sems Event Management 0524493173 | 0507841571