இந்தியா – சவூதி இடையே பயணிக்க விசா தேவையில்லை; யார் யாருக்கு  பொருந்தும்?

தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் சவூதி அரேபியா மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக சவூதி – இந்தியா இடையே பயணிக்க விசா விலக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

விசா இன்றி பயணிக்கலாம்:

சவூதி அரேபியா மற்றும் இந்தியா இடையே தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் சவூதி தலைநகர் ரியாத்தில் கையெழுத்தானது. அதன்படி தூதரக அதிகாரிகள், சிறப்பு அந்தஸ்து பெற்ற அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக சவூதி அரேபியாவிற்கு இனிமேல் விசா இன்றி பயணிக்கலாம். 

யாருக்குப் பொருந்தும்? 

இது சாதாரண பொதுமக்களுக்கானது அல்ல. தூதரக அதிகாரிகள், சிறப்பு அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் மற்றும் அரசுப் பணிக்காக பயணம் செய்யும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் குறுகிய கால தங்குதல்களுக்காக விசா இன்றி பயணம் செய்யலாம்.

என்ன பயன்? 

மேற்கூறிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அரசு அதிகாரிகள், குறுகிய கால பயணங்களுக்காக முன்னதாக விசா பெறத் தேவையில்லை. இதன் மூலம் நிர்வாக நடைமுறைகள் குறைந்து, அதிகாரிகளின் பயணம் எளிதாகும். குறுகிய கால தங்குதல்களுக்காக விசா இன்றி பயணம் செய்யலாம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், அரசு அதிகாரிகள் எளிதாகப் பயணம் செய்யவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.