துபாயில் புதிய பிரம்மாண்ட சுற்றுலா தலம் அமைக்க ஆட்சியாளர் உத்தரவு!

துபாயில் திறந்தவெளி தியேட்டர், பூங்கா, ஏரி உள்ளிட்ட அம்சங்களுடன் அல் லயன் ஒயாசிஸ் (Al Layan Oasis) என்ற புதிய சுற்றுலா தலத்தை கட்டமைக்க துபாய் ஆட்சியாளர் உத்தரவிட்டார். 

அல் லயன் ஒயாசிஸ்

துபாய் சுற்றுலா துறையில் மேலும் புதிய அனுபவங்களை வழங்கும் விதமாக 10 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அல் லயன் ஒயாசிஸ் (Al Layan Oasis) என்ற புதிய பிரமாண்ட சுற்றுலா தலம் அமையும் என்று துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.

பிரமாண்ட ஏரி:

திறந்தவெளி தியேட்டர், பூங்கா, விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட அம்சங்கள் அமைய உள்ள இந்த சுற்றுலா தலத்தில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஒரு ஏரியும் அமையவுள்ளது.

நான்கு முக்கிய பகுதிகள்:

மேலும் இந்த சுற்றுலா தலம் ஹப் பார்க் (Hub Park), குடும்ப பூங்கா (Family Park), கேன்யன் பார்க் (Canyon Park) மற்றும் டிரெய்லர் பார்க் (Trailer Park) ஆகிய நான்கு முக்கிய பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக இதில் 1,000 கார் பார்க்கிங் இடங்கள், 14 கி.மீ நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகள் அமைக்கப்படவுள்ளன. 

இந்த சுற்றுலா தலத்திற்கு ஆண்டுதோறும் 330,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாயின் நீலம் மற்றும் பசுமைத் திட்டத்தின் கீழ், அல் லயன் ஒயாசிஸ் சுற்றுலா தலத்தை அமைப்பதற்கு AED 4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் பிரபலமான சுற்றுலா தளமான ஜெபல் ஜெய்ஷ் மலைத்தொடருக்கு பேருந்து சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.